என் மலர்
செய்திகள்

கடையநல்லூரில் மர்ம காய்ச்சலுக்கு கர்ப்பிணி பெண் பலி
கடையநல்லூரில் மர்ம காய்ச்சலுக்கு கர்ப்பிணி பெண் பலியானார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் பெண்கள் பாடசாலை தெருவை சேர்ந்தவர் செய்யதலி. இவரது மனைவி முகைதீன் பாத்திமா (வயது22). இவர்களுக்கு திருமணமாகி 6 மாதங்கள் ஆகிறது. முகைதீன் பாத்திமா கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை கடையநல்லூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முகைதீன் பாத்திமா இன்று இறந்தார்.
மர்ம காய்ச்சலுக்கு கர்ப்பிணி பெண் பலியான சம்பவம் கடையநல்லூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story






