என் மலர்
செய்திகள்

தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும்: சரத்குமார் பேச்சு
‘தமிழ்நாட்டை தமிழன் தான் ஆளவேண்டும்’ என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் பேசினார். இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம்.
திருப்பத்தூர் :
வேலூர் மேற்கு மாவட்ட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் திருப்பத்தூரில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
சிறப்பு அழைப்பாளராக கட்சியின் நிறுவன தலைவர் ஆர்.சரத்குமார் கலந்து கொண்டு பேசியதாவது :-
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தொடங்கி 10 ஆண்டுகள் ஆகிறது. அனைவருக்கும் கல்வி, சுகாதாரம், குடிநீர் உள்பட அடிப்படை தேவைகள் கிடைக்க செய்வதே கட்சியின் நோக்கமாகும்.
இப்போது இருக்கிற இளைஞர்களுக்கு சுதந்திரம் பெற்ற வரலாறு தெரியாமல் போய்விடும் போல் உள்ளது. அவர்களுக்கு நாம் பெற்ற சுதந்திரத்தை எப்படி பெற்றோம் என தெரியப்படுத்த வேண்டும்.
கருப்பு பண ஒழிப்பு, தீவிரவாத ஒழிப்புக்காக பிரதமர் மோடி கொண்டு வந்த ரூ.500, ரூ.1,000 செல்லாது என அறிவித்த திட்டம் சரியானது தான். ஆனால் செயல்பாடு தான் சரியில்லை. இந்த பிரச்சினையில் கடைக்கோடி மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். பரபரப்புக்காக அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை.
கூடங்குளம் அணு உலையை திறக்க வேண்டும் என்பதற்காக நான் 10 ஆயிரம் பேருடன் நெல்லையில் உண்ணாவிரதம் இருந்தேன். மற்ற கட்சிகள் திறக்க கூடாது என போராட்டம் நடத்தினார்கள். நமக்கு மின்சார பற்றாக்குறை. ஆகவே எது தேவையோ அதற்காக தான் போராட வேண்டும்.
கல்வி திட்டத்தில் ஏழைக்கு ஒரு படிப்பு, பணக்காரனுக்கு ஒரு படிப்பு என உள்ளது. அரசாங்கம் 50 சதவீதம் கூட வரி போட்டு கொள்ளட்டும். அதே நேரத்தில் அனைவருக்கும் ஒரே மாதிரியான இலவச கல்வியை கொடுக்க வேண்டும். வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும். இல்லையென்றால் 20 ஆண்டுகள் கழித்து தங்க தட்டு இருக்கும். ஆனால் சாப்பிட சோறு கிடைக்காது.
தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும். தைரியமான ஒருவர் வர வேண்டும். மாற்றம் கொண்டு வர வேண்டும். இந்தியா சுதந்திரம் அடைவதற்காக எப்படி மகாத்மா காந்திக்கு சாதி, மதமின்றி அனைவரும் ‘வெள்ளையனே வெளியேறு’ என முழக்கமிட்டு சுதந்திரம் அடைய பாடுபட்டார்களோ, அதுபோல தமிழன் ஆள பாடுபட வேண்டும்.
நடிகர் சங்கம் சார்பில், நான் முன்பு தலைவராக இருந்தபோது ரூ.14 கோடி ஊழல் செய்து இருப்பதாக கூறினார்கள். பின்னர் அது இல்லை, ரூ.1 கோடியே 40 லட்சம் ஊழல் செய்து இருக்கிறார் என்றார்கள். அதன்பிறகு ரூ.40 லட்சத்தை நானே எடுத்து கொடுத்து விட்டேன் என்கிறார்கள். தற்போது அவர்களால் என் மீது எந்தவித ஊழல் குற்றச்சாட்டையும் கூற முடியவில்லை. எந்த நடிகரை வேண்டுமானாலும் ரசியுங்கள். அவரது குடும்பம் நன்றாக இருக்க வேண்டும். ஆனால் வாக்களிக்கும் போது தமிழனுக்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.

Next Story