என் மலர்

  செய்திகள்

  அதிகரிக்கும் சுற்றுலா பயணிகள்: கொடைக்கானலில் போலீஸ் பாதுகாப்பு
  X

  அதிகரிக்கும் சுற்றுலா பயணிகள்: கொடைக்கானலில் போலீஸ் பாதுகாப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புத்தாண்டை கொண்டாட சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளதால் கொடைக்கானலில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
  கொடைக்கானல்:

  புத்தாண்டை கொண்டாட சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளதால் கொடைக்கானலில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

  நாளை மறுநாள் (1-ந் தேதி) புத்தாண்டு பிறக்கிறது. இதனை கொண்டாட பெரு நகரங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. சுற்றுலா தலமான கொடைக்கானலில் புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாக நடைபெறும். இதற்காக கோடை இண்டர்நேசனல், கால்டன், சபரீஷ் உள்ளிட்ட நட்சத்திர ஓட்டல்களில் கலை நிகழ்ச்சிகள் விருந்துகள் உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

  புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இப்போதே வர தொடங்கி விட்டனர். ஓட்டல்கள்மற்றும் விடுதிகளில் அறைகள் அனைத்தும் முன்பதிவு செய்யபட்டுவிட்டன.

  சுற்றுலா பயணிகள் கூட்டத்தை கருத்தில் கொண்டு கொடைக்கானலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகள் மற்றும் முக்கிய சுற்றுலா இடங்களில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். ஆயுத படை போலீசாரும் வரவைழக்கப்பட்டு உள்ளனர்.

  போக்குவரத்து சிரமத்தை தவிர்ப்பதற்காக மூஞ்சிக்கல் பகுதியிலும், ஏரிச்சாலை பகுதியிலும் ஒருவழிப்பாதை அமல்படுத்தப்பட்டு உள்ளது. நெரிசல் ஏற்படாமல் இருக்க போக்குவரத்து போலீசாரும் முக்கிய சந்திப்புகளில் கண்காணித்து வருகிறார்கள்.

  Next Story
  ×