என் மலர்

    செய்திகள்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 உயர்வு
    X

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 உயர்வு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.150 உயர்ந்து, ஒரு சவரன் 21,680-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலை ரூ. 152 உயர்ந்து பவுன் ரூ. 21, 680-க்கு விற்கிறது.

    சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது.

    கடந்த 27-ந் தேதி ஒரு பவுனுக்கு ரூ. 248 அதிகரித்து ரூ. 21 ஆயிரத்து 456 ஆக இருந்தது.

    மறுநாள் 28-ந் தேதியும் அதே விலை தான் இருந்தது. நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ. 72 உயர்ந்து ரூ. 21 ஆயிரத்து 528-க்கு விற்றது.

    இன்று மேலும் பவுனுக்கு ரூ. 152 அதிகரித்துள்ளது. ஒரு பவுன் ரூ 21 ஆயிரத்து 680 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ. 19 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 2,710-க்கு விற்பனை ஆகிறது.

    தங்கம் மீதான முதலீடு அதிகரிப்பு மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் விலை உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

    வெள்ளி ஒரு கிலோ ரூ.39 ஆயிரத்து 630 ஆகவும், ஒரு கிராம் ரூ. 42.40 ஆகவும் உள்ளது.
    Next Story
    ×