என் மலர்

  செய்திகள்

  பவானி சாகர் அருகே மகள் காதல் திருமணம் செய்ததால் தந்தை தற்கொலை
  X

  பவானி சாகர் அருகே மகள் காதல் திருமணம் செய்ததால் தந்தை தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பவானி சாகர் அருகே மகள் காதல் திருமணம் செய்ததால் மனம் உடைந்த தந்தை வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

  ஈரோடு:

  பவானி சாகர் அருகே உள்ள கொத்தமங்கலம் தயிர் பள்ளம் என்ற இடத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 44). தொழிலாளி இவரது மனைவி வசந்தா (40). இவர்களது மகள் நித்தியா.

  நித்தியா ஒருவரை காதலித்து வந்தார் , இதற்கு தந்தை வேலுச்சாமி கடும் எதிர்ப்பு தொவித்தார். இவரது எதிர்ப்பை பொருட்படுத்தாமல் நித்தியா வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

  இதனால் வேலுச்சாமி மனம் உடைந்தார். அவர் மற்றவாகளிடம் தனது மகள் எனது பேச்சை கேட்காமல் காதல் திருமணம் செய்து கொண்டாளே என்று அழுது புலம்பினார்.

  இந்த நிலையில் அவர் வி‌ஷம் குடித்த நிலையில் வீட்டில் மயங்கி கிடந்தார் உடனே அவரை ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் வேலுச்சாமி பரிதாபமாக இறந்தார்.

  இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×