என் மலர்

  செய்திகள்

  ஆத்தூர் அருகே ஜெயலலிதா நினைவிடத்தை பார்க்க சென்ற பெண் கார் மோதி பலி
  X

  ஆத்தூர் அருகே ஜெயலலிதா நினைவிடத்தை பார்க்க சென்ற பெண் கார் மோதி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆத்தூர் அருகே ஜெயலலிதா நினைவிடத்தை பார்க்க சென்னைக்கு வந்துக்கொண்டிருந்த பெண் கார் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
  ஆத்தூர்:

  திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த 55 பேர் சென்னையில் உள்ள மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தை பார்க்க முடிவு செய்தனர்.

  அதற்காக அரசு பஸ்சை வாடகைக்கு பிடித்து நேற்றிரவு சென்னைக்கு புறப்பட்டனர். இந்த பஸ்சை ராமசாமி என்பவர் ஓட்டினார்.

  நேற்று நள்ளிரவு இந்த பஸ் சேலம் மாவட்டம் ஆத்தூர்-தென்னங்குடி பாளையம் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவர் பஸ்சை சாலையோரம் நிறுத்தினர்.

  பஸ்சில் இருந்தவர்கள் இயற்கை உபாதை கழிப்பதற்காக இறங்கி சென்றனர். அப்போது சாலையை கடக்க முயன்ற போது திருப்பூர் கடை வீதியை சேர்ந்த சரஸ்வதி (வயது 60) என்பவர் மீது ஊட்டியில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஒரு கார் மோதியது.

  இதில் உடல் நசுங்கிய அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த ஆத்தூர் போலீசார் அங்கு விரைந்து சென்று சரஸ்வதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  இந்த விபத்தில் காரில் வந்தவர்களும் காயம் அடைந்தனர். அவர்களும் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

  இது குறித்து ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  Next Story
  ×