search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலைக்கு முன்பு நண்பர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பிய வியாபாரி
    X

    தற்கொலைக்கு முன்பு நண்பர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பிய வியாபாரி

    விழுப்புரத்தில் வியாபாரி பாபு குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் குறித்து தனது செல்போனில் இருந்து வாட்ஸ்அப் மூலம் தனது நண்பர்களுக்கு தகவல் அனுப்பி உள்ளார்.
    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் வியாபாரி பாபு குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் குறித்து தனது செல்போனில் இருந்து வாட்ஸ்அப் மூலம் தனது நண்பர்களுக்கு தகவல் அனுப்பி உள்ளார்.

    நானும், பெருமாள் என்பவரும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு வரதராஜன் என்பவரிடம் நெல் வியாபாரம் செய்வது எப்படி? என்பது குறித்து தெரிந்து கொண்டோம்.

    அதன் பிறகு நானும், பெருமாளும் தனியாக தொழில் தொடங்க முடிவு செய்தோம். அதன் பேரில் நான் 15 லட்சம் ரூபாய் கடன் வாங்கினேன். அதை பெருமாளிடம் கொடுத்தேன்.

    ஆனால், நான் கொடுத்த பணத்தை சரியாக வரவு-செலவு கணக்கில் காட்டாமல் பெருமாள் கையாடல் செய்து விட்டார்.

    மேலும் எனது வங்கி கணக்கு எண்ணை எப்படியோ தெரிந்து கொண்டு எனது கணக்கில் உள்ள பணத்தை அவரே கையெழுத்து போட்டு கையாடல் செய்து விட்டார். இதனால் எனக்கு 20 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டது. வாங்கிய கடனுக்கு சரியாக வட்டி கட்ட முடியாமல் கஷ்டப்பட்டேன்.

    இதனால் எனது குடும்பம் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டது. அதோடு பெருமாள் தனது கையாடலை நிறுத்திக் கொள்ளாமல் என்னை தொந்தரவு செய்து ஏமாற்றி வந்தார்.

    இதனால் நான் வாழ்க்கையில் வெறுப்படைந்து மனமுடைந்து காணப்பட்டேன். இனியும் இப்படி கடன் தொல்லையால் வாழ முடியாது என கருதி எனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்கிறேன்.

    நான் எனது குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொள்வதற்கு பெருமாள் தான் காரணம். அவரை போலீசார் உடனே கைது செய்து தண்டிக்க வேண் டும்.

    இவ்வாறு பாபு வாட்ஸ்-அப் தகவலில் கூறியுள்ளார்.

    இதையடுத்து பாபு கூறும் பெருமாள் யார்? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
    Next Story
    ×