என் மலர்

  செய்திகள்

  முத்துப்பேட்டை அருகே கள்ளக்காதலனை கொன்ற பெண் கைது
  X

  முத்துப்பேட்டை அருகே கள்ளக்காதலனை கொன்ற பெண் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முத்துப்பேட்டை அருகே கள்ளக்காதலனை கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

  முத்துப்பேட்டை:

  திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள கீழநம்மங்குறிச்சியை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 43). இவர்களுக்கு கண்ணதாசன் (23), கவியரசன் (21) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

  முத்துப்பேட்டையை அடுத்த இடும்பாவனத்தை சேர்ந்தவர் மற்றொரு குணசேகரன் (48). விவசாயி. இவருக்கும், ஜெயலட்சுமிக்கும் இடையே நீண்டநாட்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை ஜெயலட்சுமியின் மகன்கள் பலமுறை கண்டித்துள்ளனர். இதையும் மீறி குணசேகரன், ஜெயலட்சுமியின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்று உள்ளார்.

  இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயலட்சுமி, அவருடைய மகன்கள் கண்ணதாசன், கவியரசன் ஆகிய 3 பேரும் சேர்ந்து கடந்த ஜனவரி மாதம் 23-ந்தேதி குணசேகரனை அரிவாளால் வெட்டிக்கொலை செய்து விட்டு, உடலை அப்பகுதியில் உள்ள வயலில் வீசி சென்றுள்ளனர்.

  இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணதாசன், கவியரசன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில், ஏட்டுகள் சண்முகம், பிரபாகரன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் தலைமறைவான ஜெயலட்சுமியை தேடி வந்தனர்.

  இந்த நிலையில் ஜெயலட்சுமி சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருப்பதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு நேற்றுமுன்தினம் இரவு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் குரோம்பேட்டை சென்று ஜெயலட்சுமியை நேற்று கைது செய்து முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இதைத்தொடர்ந்து அவரிடம், போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை திருத்துறைப்பூண்டி சப்- மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

  Next Story
  ×