search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வண்டலூர் பூங்காவில் இருந்து கருங்குரங்கு தப்பியது
    X

    வண்டலூர் பூங்காவில் இருந்து கருங்குரங்கு தப்பியது

    பூங்காவில் சரிந்து விழுந்த மரங்களை அறுக்கும் சத்தத்தில் மிரண்ட நீலகிரி கருங்குரங்கு ஒன்று தப்பிவிட்டது. அது கிராமத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.
    தாம்பரம்:

    வார்தா புயலில் வண்டலூர் புங்காவில் இருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன. முன் எச்சரிக்கையாக விலங்குகள், பறவைகள் அதன் இருப்பிடங்களில் அடைக்கப்பட்டதால் அவை தப்பவில்லை.

    தற்போது சரிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது. மரங்களை வெட்டும் சத்தம் கேட்டு அடைக்கப்பட்டுள்ள விலங்குகள் மிரண்டுபோய் காணப்படுகிறது.

    இந்த நிலையில் மரம் அறுக்கும் எந்திர சத்தம் கேட்டு அங்கிருந்த கருங்குரங்கு ஒன்று தப்பி வெளியில் சென்றுவிட்டது. அது வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் கொளப்பாக்கம் கிராமத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

    ஓடு, கூரை வீடுகளுக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை வீசி எரிகிறது. மேலும் சிறுவர்களையும் அச்சுறுத்தி வருகிறது. அதனை பொது மக்கள் பிடிக்க முயன்றபோது தப்பி ஓடிவிட்டது.

    தொடர்ந்து அந்த கருங்குரங்கு வீடு வீடாக தாவி கிராம மக்களை பீதியில் ஆழ்த்து உள்ளது. அட்டகாசம் செய்யும் கருங்குரங்கை பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து வண்டலூர் பூங்கா ஊழியரிடம் கேட்ட போது, ‘பூங்காவில் சரிந்து விழுந்த மரங்களை அறுக்கும் சத்தத்தில் மிரண்ட நீலகிரி கருங்குரங்கு ஒன்று தப்பிவிட்டது. அதனை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது’ என்றார்.

    Next Story
    ×