என் மலர்

    செய்திகள்

    கோவையில் சிகிச்சை பெற்று வரும் சுப்பிரமணிய சுவாமியுடன் தா.பாண்டியன் சந்திப்பு
    X

    கோவையில் சிகிச்சை பெற்று வரும் சுப்பிரமணிய சுவாமியுடன் தா.பாண்டியன் சந்திப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கோவை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் வரும் பாரதீய ஜனதா தலைவர் சுப்பிரமணியசுவாமியை தா.பாண்டியன் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.

    கோவை:

    கோவை சிங்காநல்லூரில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெறும் திராவிடர் இயக்க கொள்கை பிரகடன நூற்றாண்டு நிறைவு விழாவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய குழு உறுப்பினர் தா.பாண்டியன் கலந்து கொண்டார்.

    முன்னதாக அவர் கோவை ராமநாதபுரத்தில் உள்ள ஆர்ய வைத்திய பார்மசிக்கு சென்றார். அங்கு பாரதீய ஜனதா தலைவர் சுப்பிரமணியசுவாமியும் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்தது. இதையடுத்து அவரை தா.பாண்டியன் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.

    இதுகுறித்து தா.பாண்டியனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட போது மேடையில் இருந்த எனக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது கோவை ஆர்ய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றேன். அதன தொடர்ச்சியாக சிகிச்சை பெறுவதற்கு அங்கு வந்தேன். அப்போது சுப்பிர மணிய சுவாமியும் அங்கு சிகிச்சை பெற்று வருவது தெரிய வந்தது. எனவே அவரை சந்தித்து உடல்நலம் விசாரித்தேன். அரசியல் ரீதியாக எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×