என் மலர்
செய்திகள்

சென்னையில் இருந்து சென்ற மின்சார ரெயிலில் தவித்த குழந்தை
சென்னையில் இருந்து திருமால்பூருக்கு சென்ற மின்சார ரெயிலில் அனாதையக கிடந்த பச்சிளம் பெண் குழந்தை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சீபுரம்:
சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து காஞ்சீபுரம் அருகேயுள்ள திருமால்பூருக்கு நேற்று இரவு மின்சார ரெயில் புறபபட்டு சென்றது. இரவு 10.40 மணிக்கு அந்த ரெயில் திருமால்பூர் ரெயில் நிலையத்தை அடைந்தது.
பயணிகள் இறங்கிச் செல்லும் போது ரெயில் பெட்டியில் உள்ள இருக்கையில் பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை அனாதையாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து ரெயில்வே போலீசுக்கு தகவல் அளித்தனர். ரெயில்வே பாதுகாப்பு போலீசார் மோகன்தாஸ், விமல்குமார்ராய் ஆகியோர் அங்கு வந்தனர். அந்த குழந்தைக்கு யாரும் சொந்தம் கொண்டாடாததால் ரெயில்வேக்கு சொந்தமான ஆம்புலன்சை வரவழைத்து குழுந்தையை பத்திரமாக காஞ்சீபுரம் அரசு மருத்து வமனையில் ஒப்படைத்தனர்.
பிறந்து 3 நாட்களே ஆன அந்த பெண் குழந்தையை விட்டு சென்றது யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story






