என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
நடுக்கடலில் மீன் பிடித்த பாம்பன்-தூத்துக்குடி மீனவர்கள் சிறைபிடிப்பு
By
மாலை மலர்21 Dec 2016 7:09 AM GMT (Updated: 21 Dec 2016 7:09 AM GMT)

பாம்பன்-தூத்துக்குடியை சேர்ந்த மீனவர்களை 2 படகுகளுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றதால் பதட்டம் ஏற்பட்டு உள்ளது.
ராமேசுவரம்:
இந்திய கடல் எல்லையில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தாக்குவதும், சிறைபிடிப்பதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. இதற்கு தீர்வு காண மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.
நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கும் கட்சிகளின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் மீனவர்களின் காட்சி மட் டும் மாறவில்லை. கடந்த சில தினங்களாக அடிக்கடி மீனவர்கள மீதான தாக்குதல் தொடர்ந்து வருகிறது. 2 நாட்களுக்கு முன்புகூட ராமேசுவரம் மீனவர்கள், இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டனர். நேற்று புதுக்கோட்டை மீனவர்கள் 7 பேர் சிறைபிடிக்கப்பட்டனர்.
இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், இன்று பாம்பன் மற்றும் தூத்துக்குடி மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
ராமேசுவரம் அருகே உள்ள பாம்பனில் இருந்து நேற்று மீனவர்கள், விசைப் படகுகளில் கடலுக்கு சென்றனர். அவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், திடீரென தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும் கிறிஸ்டி என்பவரது விசைப்படகையும் அவர்கள் சிறைபிடித்தனர். அந்த படகில் இருந்த கிறிஸ்டி உள்பட 5 பேரையும் படகோடு அவர்கள் பிடித்து சென்றனர்.
இதேபோல் அந்த பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த தூத்துக்குடியை சேர்ந்த நாட்டுப் படகு மீனவர்கள் 7 பேரையும் படகோடு, இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். இந்த சம்பவம் தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வழக்கமாக விசைப்படகுகளை மட்டுமே சிறைபிடிக்கும் இலங்கை கடற்படையினர், தற்போது நாட்டுப் படகையும் சிறைபிடித்துள்ளனர்.
சிறைபிடிப்பு சம்பவத் தால் தமிழக மீனவர்கள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். சிறைபிடிக்கப்பட்டுள்ள விசைப்படகு உரிமையாளர் பாம்பனை சேர்ந்த கிறிஸ்டி, இருதய அறுவை சிகிச்சை செய்தவர். தினமும் மருந்து மாத்திரை சாப்பிடாவிட்டால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என உறவினர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இலங்கை சிறையில் உள்ள 22 தமிழக மீனவர்கள், 109 மீன்பிடி படகுகளை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடிக்கு, முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதி இருப்பதாகவும், படகுகளை மீட்க 2-ந்தேதி பேச்சுவார்த்தை நடக்க உள்ளது என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறி உள்ள நிலையில், இன்று மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
×