என் மலர்
செய்திகள்

4 நாட்களுக்கு பின்னர் இன்று மலைரெயில் இயங்கியது: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
4 நாட்களுக்கு பின்னர் இன்று மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை ரெயில் போக்குவரத்து தொடங்கியது. மலை ரெயிலில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.
மேட்டுப்பாளையம்:
கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த 14-ந்தேதி இரவு நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், பர்னிலியாறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
மழை காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைரெயில் பாதையில் ஹில் குரோவ்- ரன்னிமேடு ரெயில் நிலையங்களுக்கு இடையே மண்சரிவு ஏற்பட்டு ரெயில் பாதையில் சிறிய பாறாங்கற்கள் உருண்டு விழுந்தன. மண் சரிந்து ரெயில் பாதையை மூடியது. இதனால் மேட்டுப்பாளையம்-குன்னூர் ரெயில் போக்குவரத்து 15-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை மலை ரெயில் இயக்கம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் ரெயில் பாதையை சீரமைக்கும் பணி கடந்த 15-ந்தேதி முதல் முழுவீச்சில் தொடங்கியது.
ஊட்டி மலைரெயில் இருப்பு பாதை சீனியர் செக்ஷன் என்ஜினீயர் கோவிந்தராஜ், உதவி என்ஜினீயர் வெள்ளிங்கிரி ஆகியோர் மேற்பார்வையில் மேட்டுப்பாளையம், குன்னூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ரெயில்வே தொழிலாளர்கள் ரெயில்பாதையை சீரமைக்கும் பணியில் போர்க்கால நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
ரெயில் தண்டவாளத்தில் விழுந்து கிடந்த சிறிய பாறாங்கற்கள் கம்ப்ரசர் எந்திரம் மூலம் துளையிட்டு உடைத்து அப்புறப்படுத்தப்பட்டது. சரிந்த மண்ணும் அகற்றப்பட்டது. சேதம் அடைந்த ரெயில் தண்டவாளங்கள், ராக் பார்கள் மாற்றப்பட்டு புதிய வைகள் பொருத்தப்பட்டன. ரெயில் பாதையை சீரமைக்கும் பணி முழுவதும் நேற்று மாலை முடிவடைந்தது.
இதனைத் தொடர்ந்து 4 நாட்களுக்கு பின்னர் இன்று மேட்டுப்பாளையம்- குன்னூர் மலை ரெயில் போக்குவரத்து தொடங்கியது. காலை 7.10 மணிக்கு வழக்கம்போல் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு மலை ரெயில் புறப்பட்டுச்சென்றது. மலை ரெயிலில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.

Next Story