என் மலர்

    செய்திகள்

    ஆம்னி பஸ்சில் வந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்: 2 பேர் சிக்கினர்
    X

    ஆம்னி பஸ்சில் வந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்: 2 பேர் சிக்கினர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இலங்கைக்கு கடத்துவதற்காக ராமநாதபுரத் திற்கு ஆம்னி பஸ்சில் கொண்டுவந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் கடல் பகுதி வழியாக இலங்கைக்கு கஞ்சா, போதை மாத்திரைகள் போன்றவை கடத்தப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

    இதன்பேரில் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளும் போலீசார் அவ்வப்போது போதை பொருட்களை கைப்பற்றி வருகின்றனர்.

    கடந்த அக்டோபர் மாதம் 21-ந்தேதி மண்டபம் அருகே வேதாளை கடற்கரை பகுதியில் ரூ.2 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகளை போலீசார் கைப்பற்றினர்.

    இந்த நிலையில் இலங்கைக்கு கடத்துவதற்காக சென்னையில் இருந்து போதை மாத்திரைகளை 2 பேர் ராமநாதபுரம் கொண்டு வருவதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் ராமநாத புரம் கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கென்னடி தலைமையில் போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். குறிப்பிட்ட ஆம்னி பஸ் புதிய பஸ் நிலையம் வந்ததும் அதில் இருந்து சந்தேகத்திற்கிடமாக 2 பேர் இறங்கினர்.

    அவர்களை கியூ பிரிவு போலீசார் மடக்கி விசாரணை செய்தனர். அப்போது அந்த 2 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். இதனை தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த உடமைகளை போலீசார் சோதனையிட்டனர்.

    அதில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என தெரிகிறது. மேலும் அதன் சர்வதேச மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இந்த போதை மாத்திரைகளை இலங்கைக்கு கடல் வழியாக கடத்தி செல்வதற்காக கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த கியூ பிரிவினர் அதனை கொண்டு வந்த 2 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்களது பெயர் ராமநாதபுரம் இந்திரா நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது35), சைபுல் இஸ்லாம் (26) என தெரியவந்தது. அவர்கள் யாருக்காக கடத்தி வந்தார்கள்? இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து கியூ போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×