என் மலர்
செய்திகள்

கொடைக்கானல் மசாஜ் சென்டரில் கேரள அழகிகள் விபசாரம்: உரிமையாளர்கள் கைது
கொடைக்கானல்:
கேரள மாநிலம் பெரும்பாவூரை சேர்ந்தவர் பின்சி (வயது34). இவரது உறவினர் கண்ணூரை சேர்ந்த சாக்கோ (52). இவர்கள் இருவரும் சேர்ந்து கொடைக்கானல் நாயுடுபுரத்தில் மசாஜ் சென்டர் நடத்தி வருகின்றனர்.
கொடைக்கானல் சுற்றுலா வரும் இளைஞர்களை கவருவதற்காக மசாஜ் சென்டரில் கேரள அழகிகளை வைத்து ரகசியமாக விபசாரம் செய்து வந்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதியில் வியாபாரம் செய்து வரும் காதர் என்பவர் கொடைக்கானல் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் போலீசார் அந்த மசாஜ் சென்டருக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு இருந்த 5 கேரள இளம்பெண்களை மீட்டனர்.
அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய பின்சி, சாக்கோ ஆகியோரை கைது செய்தனர். அவர்களுக்கு உடந்தையாக இருந்த ஜார்ஜ், பின்னி உள்ளிட்ட 3 பேரை தேடி வருகிறார்கள். மீட்கப்பட்ட இளம்பெண்கள் வத்தலக்குண்டுவில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.