என் மலர்

  செய்திகள்

  கவுரவ கொலை செய்வதாக சப்-கலெக்டர் அலுவலகத்தில் காதல் ஜோடி புகார்
  X

  கவுரவ கொலை செய்வதாக சப்-கலெக்டர் அலுவலகத்தில் காதல் ஜோடி புகார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கவுரவ கொலை செய்வதாக இரு வீட்டாரும் மிரட்டுகிறார்கள் என பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் காதல் ஜோடி புகார் அளித்துள்ளனர்.
  பொள்ளாச்சி:

  நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் அருகே உள்ள சுப்புலாபுரத்தைச் சேர்ந்தவர் முருகஜோதி. இவர் சங்கரன் கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

  அப்போது இவருக்கும் இதே கல்லூரியில் படிக்கும் மாதவன் என்ற மாணவருக்கும் காதல் ஏற்பட்டது. இது பற்றி தெரியவந்ததும் இரு வீட்டிலும் எதிர்ப்பு ஏற்பட்டது. இதையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி பழனி முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

  பின்னர் அவர்கள் பாதுகாப்பு கேட்டு பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலத்திற்கு வந்தனர்.

  பின்னர் அவர்கள் ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது, ‘எங்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டோம். எங்களை இரு வீட்டாரும் கவுரவ கொலை செய்யும் நோக்கில் மிரட்டி வருகின்றனர். எனவே எங்கள் உயிருக்கு பாதுகாப்பு தரவேண்டும்’ என்று அதில் கூறியிருந்தனர்.

  இதையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். பின்னர் காதல் ஜோடி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
  Next Story
  ×