என் மலர்

  செய்திகள்

  தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 2-வது யூனிட் பழுது
  X

  தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 2-வது யூனிட் பழுது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் இன்று அதிகாலை 2-வது யூனிட் திடீரென பழுதானது. 5 மற்றும் 2-வது யூனிட்டில் மின் உற்பத்தி நடக்காததால் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
  தூத்துக்குடி:

  தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் உள்ளன. இவற்றின் மூலம் தினமும் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

  இங்குள்ள யூனிட்டுகள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் அடிக்கடி பழுதாகி விடுகிறது. இதனால் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் சமீபகாலமாக முழு மின் உற்பத்தி என்பது கேள்விக்குறியாக உள்ளது. பராமரிப்பு பணிக்காக இங்குள்ள யூனிட்டுகள் ஆண்டிற்கு ஒருமுறை சில நாட்கள் நிறுத்தப்படும். அதே போல் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 5-வது யூனிட் நிறுத்தப்பட்டதால் அதில் மின் உற்பத்தி நடக்கவில்லை.

  இந்நிலையில் இன்று அதிகாலை 2-வது யூனிட் திடீரென பழுதானது. இதை யடுத்து அந்த யூனிட்டிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு பழுதை சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 5 மற்றும் 2-வது யூனிட்டில் மின் உற்பத்தி நடக்காததால் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

  Next Story
  ×