என் மலர்
செய்திகள்

கன்னியாகுமரி அருகே அழகியுடன் உல்லாச போட்டியில் மோதிக்கொண்ட வாலிபர்கள்
கன்னியாகுமரி அருகே அழகியுடன் உல்லாச போட்டியில் 2 வாலிபர்கள் மோதிக்கொண்டதால் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் இருவரையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டிற்கு இரவு-பகல் எந்த நேரமும் ஆண்கள் வந்து சென்ற வண்ணம் இருந்தனர்.
நாளடைவில் இந்த சம்பவம் தொடர் கதையாக மாறியதால் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களுக்கு அந்த பெண் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் அந்த பெண்ணின் வீட்டை ரகசியமாக கண்காணித்தனர்.
அப்போது அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்து செல்பவர்களின் நோக்கம் என்ன என்பது பொதுமக்களுக்கு தெரியவந்தது. இதனால் அவர்கள் அந்த பெண்ணை எச்சரித்தனர்.
இது தொடர்ந்தால் இதுபற்றி போலீசில் புகார் செய்வோம் என்று கூறினார்கள். இதனால் அந்த பெண்ணின் வீட்டிற்கு ஆண்கள் வருவது சில நாட்கள் குறைந்து காணப்பட்டது.
ஆனாலும் மீண்டும் இந்த செயல் அந்த வீட்டில் அரங்கேற தொடங்கியது. வழக்கம் போல் வாலிபர்கள் அந்த பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்ல தொடங்கினார்கள்.
இந்த நிலையில் நேற்று மாலை அந்த பெண்ணின் வீட்டிற்கு ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்தார். தனது மோட்டார் சைக்கிளை அந்த பகுதியில் மறைவிடத்தில் நிறுத்திவிட்டு அக்கம் பக்கத்தினர் யாரும் தன்னை கவனிக்கிறார்களா? என்பதை பார்த்தவாறு அந்த பெண்ணின் வீட்டை நோக்கி செல்ல தொடங்கினார்.
அவர் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அந்த வாலிபர் கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. மீண்டும் மீண்டும் கதவை தட்டியும் நீண்ட நேரம் கழித்தே கதவு திறக்கப்பட்டது.
மேலும் கதவை திறந்தது அவர் எதிர்பார்த்த பெண் அல்ல. வேறு ஒரு வாலிபர் வீட்டில் இருந்து வெளியே வந்தார். அவரை பார்த்ததும் வெளியில் நின்று கொண்டிருந்த வாலிபருக்கு ஆத்திரம் ஏற்பட்டது. அவரிடம் தகராறில் ஈடுபட்டார்.
இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதனால் அங்கு பொதுமக்கள் கூடினார்கள். அவர்கள் தகராறில் ஈடுபட்ட 2 வாலிபர்களையும் சுற்றி வளைத்தனர்.
அவர்களிடம் விசாரித்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் அந்த வீட்டில் இருந்த பெண்ணிடம் உல்லாசமாக இருக்க வந்ததும், அவர் வரும்போது மற்றொரு வாலிபருடன் அந்த பெண் உல்லாசமாக இருந்ததும் தெரியவந்தது.
உல்லாச போட்டியில் அவர்கள் இருவர் இடையே மோதல் உருவானதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசுக்கு இதுபற்றி பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தி நடந்த விவரங்களை தெரிந்து கொண்டனர்.
அவர்கள் அந்த 2 வாலிபர்களையும் எச்சரித்து அங்கிருந்து விரட்டியடித்தனர். மேலும் அந்த பெண்ணிற்கும் எச்சரிக்கை விடுத்து விட்டு சென்றனர்.

Next Story