search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.500, 1000 செல்லாது அறிவிப்பால் வேலூர் மாவட்டத்தில் 1 லட்சம் பீடி தொழிலாளர்கள் பாதிப்பு
    X

    ரூ.500, 1000 செல்லாது அறிவிப்பால் வேலூர் மாவட்டத்தில் 1 லட்சம் பீடி தொழிலாளர்கள் பாதிப்பு

    500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததால் வேலூர் மாவட்டத்திலுள்ள சுமார் 1 லட்சம் பீடி தொழிலாளர்கள் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
    வேலூர்:

    ரூ.500, 1000 செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் பணதட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏ.டி.எம். மையங்கள், வங்கிகளில் பணம் எடுக்க கூட்டம் அலைமோதுகிறது.

    பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றம் செய்வதற்கு முதலில் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.4 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இந்த உச்ச வரம்பு ரூ.4,500 ஆக உயர்த்தப்பட்டது. திடீரென்று அந்த தொகை ரூ.2,000 ஆக குறைக்கப்பட்டது.

    பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றுவதற்கு ஒருவர் மீண்டும், மீண்டும் வருவதை தடுக்க விரலில் அடையாள ‘மை’ வைக்கும் திட்டத்தையும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

    இந்தநிலையில் வங்கிகள், தபால் நிலையங்களில் செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்வதற்காக மத்திய அரசு அறிவித்திருந்த காலக்கெடு இன்றுடன் (வியாழக்கிழமை) முடிவடைகிறது.

    பணத்தட்டுப்பாடு நீடிப்பதால் வேலூர் மாவட்டத்தில் உள்ள பீடி தொழிலாளர்களுக்கு கூலி வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் 1 லட்சம் பீடி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வேலூர் மாவட்ட தேசிய பீடி தொழிலாளர் சங்கத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

    500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததால் வேலூர் மாவட்டத்திலுள்ள சுமார் 1 லட்சம் பீடி தொழிலாளர்கள் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. பீடி தொழிலாளர்கள் நலனை கருதி அரசு உதவி செய்ய வேண்டும் மற்றும் வேலூர் மாவட்டத்திலுள்ள பீடி தொழிலாளர்களுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் கிடைக்க மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×