என் மலர்

  செய்திகள்

  ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கு: நெல்லை மாநகராட்சி முன்னாள் உதவி ஆணையருக்கு ஜெயில்
  X

  ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கு: நெல்லை மாநகராட்சி முன்னாள் உதவி ஆணையருக்கு ஜெயில்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் நெல்லை மாநகராட்சி முன்னாள் உதவி ஆணையருக்கு 3½ ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஊழல் தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
  நெல்லை:

  நெல்லை டவுணை சேர்ந்தவர் காந்திமதிநாதன் (வயது 65). இவர் நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் உதவி ஆணையராக பணியாற்றி கடந்த 2008-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவர் தனது ஓய்வூதிய பலன்களை பெறுவதற்காக மாநகராட்சியை அனுகினார்.

  அப்போது உதவி ஆணையராக இருந்த சிதம்பரம் என்பவர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி ரூ.3 ஆயிரம் தருவதாக காந்திமதிநாதன் அவரிடம் கூறியுள்ளார். அதற்கு சிதம்பரம் ஒத்துக்கொள்ளவே 23.8.2008 அன்று லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டு ரூ.3 ஆயிரம் பணத்துடன் காந்திமதிநாதன் மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்றார்.

  அங்கு லஞ்ச பணத்தை சிதம்பரம் வாங்கியபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். இது தொடர்பாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு ஆணையர் மதுக்முதலி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த வழக்கு நெல்லை மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இதற்கிடையில் சிதம்பரம் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

  ஆனால் வழக்கு தொடர்ந்து நடந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயசிங் குற்றம் சாட்டப்பட்ட சிதம்பரத்திற்கு 3½ வருட ஜெயில் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.
  Next Story
  ×