என் மலர்
செய்திகள்

அரவக்குறிச்சி தொகுதியில் நாளை வாக்குப்பதிவு: 96 இடங்களில் ஓட்டுப்பதிவு நேரடி ஒளிபரப்பு
அரவக்குறிச்சி தொகுதியில் நாளை 96 வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவு வெப் காஸ்டிங் முறையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். மற்ற 149 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு வீடியோ மூலம் பதிவு செய்யப்படும்.
கரூர்:
தமிழகத்தில் கடந்த மே மாதம் நடந்த பொதுத்தேர்தலின்போது பணப்பட்டு வாடா புகாரின் பேரில் தஞ்சை, அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் தேர்தல் ரத்தானது.
திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சீனிவேல் உடல் நலக்குறைவால் மரணம் அடைந் தார்.
இதையடுத்து காலியாக உள்ள அந்த 3 தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 26-ந் தேதி தொடங்கி இம்மாதம் (நவம்பர்) 2-ந்தேதி முடிந்தது. வேட்பு மனுக்கள் 3-ந்தேதி பரிசீலிக்கப்பட்டு 5-ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி 3 தொகுதிகளிலும் மொத்தம் 81 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில் பாலாஜி (அ.தி. மு.க.), கே.சி.பழனிசாமி (தி.மு.க.), பாஸ்கரன் (பா. ம.க.), பிரபு (பா.ஜ.க.), முத்து (தே.மு.தி.க.) மற்றும் சுயேட்சைகள் உள்பட 39 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இங்கு 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
கடந்த 2 வாரங்களாக நடந்துவந்த அனல் பறக்கும் பிரசாரம் நேற்று மாலை ஓய்ந்தது. இதையடுத்து அரவக்குறிச்சி தொகுதியில் முகாமிட்டிருந்த வெளியூர் நபர்கள் உடனடியாக வெளியேறினர். இதனால் தொகுதியே அமைதியானது.
இதையடுத்து அரவக்குறிச்சி தொகுதியில் நாளை வாக்குப்பதிவு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற தொகுதியில் 97 ஆயிரத்து 100 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 3 ஆயிரத்து 247 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 347 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க தொகுதி முழுவதும் 245 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் 96 வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவு வெப் காஸ்டிங் முறையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். மற்ற 149 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு வீடியோ மூலம் பதிவு செய்யப்படும்.
அந்த மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், விரலில் வைக் கும் ‘மை’ உள்ளிட்ட தேர்தல் பொருட்கள் இன்று காலை முதல் கொண்டு செல்லப்பட்டது. வாக்குப் பதிவு மையத்தில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் இன்று இரவே வாக்குச்சாவடிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
வாக்குப் பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. பதற்றமான வாக்குசாவடிகளில் துணை ராணுவ படையினர் மற்றும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகள் தொகுதி முழுவதும் சுற்றி வந்து தேர்தல் ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்கள்.
ஓட்டு எண்ணிக்கை வரு கிற 22-ந்தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. பகல் 12 மணிக்கு முடிவுகள் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story