என் மலர்

  செய்திகள்

  10-வது நாளாக வங்கி-ஏ.டி.எம். களில் தவம் கிடக்கும் பொதுமக்கள்
  X

  10-வது நாளாக வங்கி-ஏ.டி.எம். களில் தவம் கிடக்கும் பொதுமக்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  500, 1000 ரூபாய்களை மாற்ற 10-வது நாளாக வங்கிகளில் பொதுமக்கள் தவம் கிடக்கின்றனர்.

  சென்னை:

  ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். பணத்தை மாற்றுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது.

  கடந்த 9-ந் தேதி முதல் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றவும் புதிய ரூபாய் நோட்டுகளை பெறவும் மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். ஏழை, எளிய , நடுத்தர மக்கள் அன்றாட செலவுகளுக்கு கூட பணத்தை மாற்ற முடியாமல் வங்கி மற்றும் ஏ.டி.எம் மையங்கள் முன்பு தவம் கிடக்கிறார்கள்.

  அனைத்து வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். மையங்கள் முழுமையாக செயல்படாததால் இன்னும் இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படவில்லை. கட்டுப்பாடுகளை தளர்த்தினாலும் கூட மக்கள் பணத்தை இன்னும் மாற்ற முடியவில்லை.

  இன்றுடன் 10-வது நாளாக நீடித்து வரும் இந்த பிரச்சினைக்கு மத்திய அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

  காலையில் எழுந்து வேலைக்கு செல்கிறார்களோ இல்லையோ வங்கிக்கு சென்று பணத்தை மாற்றுவதே ஒரு வேலையாகவும் தொழிலாகவும் மாறிவிட்டது.

  காலை 6 மணிக்கே வங்கி வாசலில் அடையாள அட்டை, பாஸ்புத்தகம், ஆகியவற்றுடன் காத்து நிற்கிறார்கள். இவர்களுக்கு போதுமான பணத்தை வினியோகிக்க முடியாமல் வங்கிகள் ஒரு பக்கம் தவிக்கின்றன. வங்கிக்கு வருகின்ற பணத்தின் அளவும் குறைந்து விட்டதால் காத்து நிற்கும் மக்களுக்கு பணத்தை கொடுக்க முடியவில்லை.

  ஏ.டி.எம் மையங்களிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. ஏ.டி.எம் மில் வைக்கப்படும் பணம் அடுத்த அரை மணி நேரத்தில் காலியாகி விடுகிறது. சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் பெரும்பாலான ஏ.டி.எம் கள் இன்னும் முழுமையாக செயல்படவில்லை. 3 நாட்கள், 5 நாட்களுக்கு ஒரு முறை என்ற அளவில் தான் செயல்படுகிறது.

  ஏ.டி.எம்.கள் செயல்படாததால் மக்கள் வங்கிகளை நாடி வருகிறார்கள். வங்கிகளிலும் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் இந்த பிரச்சினை மேலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

  கடந்த 3 நாட்களாக பெரும்பாலான வங்கிகளில் பணம் மாற்றுவது நிறுத்தப்பட்டுள்ளது. விரலில் அழியாத மை வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதால் பணம் மாற்றம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. மை வராததால் பணம் மாற்றம் எப்போது நடைபெறும் என்று தெரியவில்லை. ஆனால் அந்தந்த வங்கி வாடிக்கையாளர்கள் பணத்தை எடுப்பதற்கே டெபாசிட் செய்வதற்கோ எந்த தடையும் இல்லை. தற்போது எல்லா வங்கிகளிலுமே வாடிக்கையாளர்கள் கூட்டம் மட்டுமே காணப்படுகிறது.

  சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் வரிசையில் நின்று பணம்- காசோலை பரிவர்த்தனையில் ஈடுபடுகிறார்கள். பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக கும்பல் கும்பலாக வந்த கூட்டம் இப்போது குறைந்து விட்டது. விரலில் மை மற்றும் தொகை ரூ.2 ஆயிரமாக குறைப்பு போன்ற நடவடிக்கையால் ஒரே நபர் திரும்ப திரும்ப வந்து பணத்தை மாற்றுவது தடுக்கப்பட்டுள்ளது.

  இது குறித்து வங்கி அதிகாரிகள் கூறும்போது, விரலில் அழியாத மை வைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 30 சதவீதம கூட்டம் குறைந்து விட்டது. வங்கியில் வாடிக்கையாளர்கள் மட்டுமே பணத்தை டெபாசிட் செய்யும் பணத்தை எடுக்கவும் முடியும். 3 நாட்களாக பணம் மாற்றும் பணி நிறுத்தப்பட்டது. வங்கிக்கு ரூபாய் நோட்டுகளும் போதுமான அளவிற்கு வராததால் எங்களால் வாடிக்கையாளர்களை முழுமையாக திருப்திபடுத்த முடியவில்லை. இருக்கும் பணத்தை கொண்டுதான் வழங்குகிறோம்.

  எப்போது போதுமான அளவு பணம் வரும் என்று தெரியவில்லை என்றார்.

  Next Story
  ×