என் மலர்

  செய்திகள்

  தற்போது வேலூர் பாலாறு வறண்டு கிடக்கும் காட்சி
  X
  தற்போது வேலூர் பாலாறு வறண்டு கிடக்கும் காட்சி

  வேலூர், திருவண்ணாமலையில் ஏரி, குளங்கள் வறண்டன

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வடகிழக்கு பருவ மழை பெய்யாததால் வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அணை, ஏரி, குளங்களில் தண்ணீர் குறைந்தன. ஒரு சில ஏரி, குளங்கள் வறண்டு காணப்படுகின்றன.
  வேலூர்:

  வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பெய்து அணை, ஏரி, குளங்கள் நிரம்பின.

  வேலூர் மாவட்டத்தில் 745 சிறு பாசன ஏரிகளும், பொதுப்பணித்துறையின் கீழ் 519 ஏரிகளும் உள்ளன. இதில் 256 சிறு பாசன ஏரிகளும், பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள 256 ஏரிகளும் முழுவதுமாக நிரம்பின.

  மேலும் 117 ஏரிகள் 75 சதவீதமும், 98 ஏரிகள் 50 சத வீதமும், 41 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பின. முக்கிய ஏரிகளாக சதுப்பேரி, ஓட்டேரியும் முழு கொள்ளளவை எட்டின.

  10 ஆண்டுகளுக்கு பிறகு தொடர்மழை காரணமாக வேலூர் பாலாற்றில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17-ந் தேதி வெள்ளம் கரை புரண்டோடியது.

  இந்த ஆண்டு பாலாற்றில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது.

  இந்த ஆண்டு பருவ மழைக்காலம் தொடங்கிய பின்னரும் இன்னமும் சரியான அளவில் மழை பெய்யவில்லை. பகலில் வெயிலும், இரவு நேரத்தில் பனிப்பொழிவும் அதிக அளவில் உள்ளது.

  திருவண்ணாமலை மாவட்டத்திலும் கடந்த ஆண்டு பருவமழை பெய்து அணை, ஏரி, குளங்கள் நிரம்பின. மாவட்டத்தில் திருவண்ணாமலை தாலுகாவில் 89 ஏரிகளும், செங்கம் தாலுகாவில் 50 ஏரிகளும், ஆரணி தாலுகாவில் 57 ஏரிகளும், போளூர் தாலுகாவில் 106 ஏரிகளும், வந்தவாசி தாலுகாவில் 146 ஏரிகளும், செய்யாறு தாலுகாவில் 135 ஏரிகளும், தண்டராம்பட்டு தாலுகாவில் 17 ஏரிகளும் உள்ளன.

  இந்த ஏரிகளில் பெரும்பாலானவை கடந்த ஆண்டு பெய்த மழையில் நிரம்பின. ஆனால் இந்த ஆண்டு மாவட்டம் முழுவதும் பருவமழை கைகொடுக்கவில்லை.

  மழை பெய்யாததால் வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அணை, ஏரி, குளங்களில் தண்ணீர் குறைந்தன. ஒரு சில ஏரி, குளங்கள் வறண்டு காணப்படுகின்றன.

  தண்ணீர் குறைந்ததால் தண்டராம்பட்டு தாலுகாவில் உள்ள சாத்தனூர் அணையில் நேற்று முன்தினம் நீர்மட்டம் 84.70 அடியாகவும் (கொள்ளளவு 119 அடி), செங்கம் தாலு காவில் உள்ள குப்பனத்தம் அணையில் நீர்மட்டம் 34.27 அடியாகவும் (கொள்ளளவு 59 அடி), கலசப்பாக்கம் தாலுகாவில் உள்ள மிருகண்டா அணையில் நீர்மட்டம் 17.84 அடியாகவும் (கொள்ளளவு 23 அடி), போளூர் தாலுகாவில் உள்ள செண்பகாத் தோப்பு அணையில் 35.42 அடியாகவும் (கொள்ளளவு 62 அடி) இருந்தது.

  இதேபோல ஏரி, குளங்களில் தண்ணீர் குறைந்தது. பல ஏரி, குளங்கள் வறண்டன. இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. சேத்துப்பட்டு ஒன்றியத்தில் 300 ஏக்கர் சம்பா நெற்பயிர் கருகும் நிலையில் உள்ளது.

  இந்த பகுதியில் உள்ள கிணறுகளில் தண்ணீர் இல்லாததாலும், பருவ மழை பொய்த்ததாலும் இந்த வறட்சி ஏற்பட்டுள்ளது. முற்றிலும் கருகிய நெற்பயிர்களில் கால்நடைகளை கட்டி விவசாயிகள் மேய விட்டுள்ளனர்.

  தொடர்ந்து பருவமழை பொய்த்து போனால் வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் மழை பெய்யாதோ? என்று விவசாயிகளும், பொதுமக்களும் வானத்தை ஏறிட்டு பார்த்தபடி உள்ளனர்.

  அவர்களின் ஏக்கத்துக்கு விடை கிடைக்குமா? என்பதற்கு இயற்கைதான் பதில் சொல்ல வேண்டும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை தாமதமானாலும் மழையின் அளவில் குறைய வாய்ப்பில்லை என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

  அதுவும் ஒரே நாளில் 45 செ.மீட்டர் அளவுக்குக்கூட மழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளனர். எனவே விவசாயிகளும், பொது மக்களும் வடகிழக்கு பருவ மழையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

  Next Story
  ×