என் மலர்

    செய்திகள்

    விழுப்புரம் அருகே கொதிக்கும் சாம்பார் கொட்டி 3 வயது குழந்தை பலி
    X

    விழுப்புரம் அருகே கொதிக்கும் சாம்பார் கொட்டி 3 வயது குழந்தை பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    விழுப்புரம் அருகே கொதிக்கும் சாம்பார் கொட்டி 3 வயது குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    விழுப்புரம்:

    விழுப்புரத்தை அடுத்த காணை அருகே உள்ள தெளி அசிசி நகரை சேர்ந்தவர் மகிமைதாஸ். இவருடைய மனைவி அந்தோணி. இவர்களுக்கு திருமணமாகி 3 வயதில் சுதர்சனன் என்ற ஆண் குழந்தை இருந்தது.

    அந்தோணி தனது வீட்டில் விறகு அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டினுள் விளையாடிக்கொண்டிருந்த சுதர்சனன், திடீரென சமையல் அறைக்கு வந்து சாம்பார் பாத்திரத்தின் மீது விழுந்தான்.

    இதில் பாத்திரத்தில் கொதித்துக் கொண்டிருந்த சாம்பார் அவனது உடல் மீது கொட்டியது. இதில் சுதர்சனன் உடல் வெந்தது. உடனே சுதர்சனனை பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சுதர்சனன் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×