என் மலர்
செய்திகள்

விபத்தை ஏற்படுத்திய பள்ளி பேருந்து.
திருச்சி அருகே ஆட்டோ மீது பள்ளி பஸ் மோதல்: கணவன்-மனைவி நசுங்கி பலி
திருச்சி அருகே இன்று ஆட்டோ மீது பள்ளி பேருந்து மோதிய விபத்தில் கணவன்-மனைவி பலியாகினர்.
திருச்சி:
திருச்சி பெரிய மிளகு பாறை நாயக்கர் தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 65). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து தொழில் செய்து வந்தார். இவரது மனைவி லலிதா (60). இவர்கள் இன்று காலை பெரிய மிளகுபாறையில் இருந்து சமயபுரத்திற்கு ஆட்டோவில் சென்றனர்.
நெ.1 டோல்கேட் அருகே பழுர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் சமயபுரத்தில் உள்ள தனியார் பள்ளி பேருந்து வந்தது.
இந்நிலையில் எதிர்பாரா தவிதமாக அந்த பேருந்து ஆட்டோவின் பின்னால் மோதியது. இதில் ஆட்டோவில் இருந்த பாண்டியன், லலிதா ஆகிய 2 பேரும் தலை நசுங்கி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் நெ.1 டோல்கேட் கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பலியான 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்துக்கான காரணம் குறித்து பேருந்து டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் கணவன்-மனைவி பலியான சம்பவம் திருச்சி பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோட்டில் இருந்து கோழி தீவனங்கள் ஏற்றிக் கொண்டு பட்டுக்கோட்டைக்கு லாரி சென்றது. லாரியை ஈரோட்டை சேர்ந்த நாச்சிமுத்து (62) ஓட்டினார்.
இன்று அதிகாலை திருச்சி கம்பரசம்பேட்டை தடுப்பணை அருகே செல்லும் போது, முன்னால் சென்ற லாரியை, நாச்சிமுத்து முந்த முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக லாரி நிலைதடுமாறி அருகில் உள்ள மின் கம்பத்தில் மோதி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின் இணைப்பை துண்டித்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் லாரி டிரைவர் நாச்சிமுத்து லேசான காயத்துடன் உயிர் தப்பினார். விபத்து குறித்து ஜீயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story