என் மலர்

    செய்திகள்

    வி.கே.புரம் அகஸ்தியர்பட்டியில் தெருவில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடிய காட்சி.
    X
    வி.கே.புரம் அகஸ்தியர்பட்டியில் தெருவில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடிய காட்சி.

    வடகிழக்கு பருவமழை: நெல்லை மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் நெல்லை மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    நெல்லை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தை பொருத்தவரை அணை பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியிலும் நன்றாக மழை பெய்கிறது. நேற்று அதிகபட்சமாக பாபநாசம் அணைப்பகுதியில் 77 மில்லி மீட்டரும், ஆலங்குளத்தில் 63.2 மில்லி மீட்டரும், சேர்வலாறில் 54 மில்லி மீட்டரும், தென்காசியில் 47 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

    பலத்த மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 250.81 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் இன்று ஒரு அடி உயர்ந்து 23.30 அடியாக உள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து இன்று 50.10 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 24 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் சற்று உயர்ந்து இன்று 34.20 அடியாக உள்ளது. இதுபோல குண்டாறு, கருப்பாநதி, அடவி நயினார், நம்பியாறு அணை பகுதிகளிலும் நேற்று நன்றாக மழை பெய்தது. இதன் காரணமாக அந்த அணைகளுக்கும் தண்ணீர் வர தொடங்கியுள்ளது.

    கடனாநதி-25, ராமநதி-25, கருப்பாநதி-28.22, குண்டாறு-19.12, அடவி நயினார்-26, வடக்கு பச்சையாறு-2, நம்பியாறு-8.96, கொடுமுடியாறு-2 அடி என்று நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    தென்காசியில் கடந்த 3 மாதங்களாக வெயில் வாட்டி வதைத்தது. கிணறு போர்களில் நீர்மட்டம் கீழே போய் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வெயில் முடிந்து சாரல் அடித்தது. நேற்று மாலை 3 மணி நேரம் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    குற்றாலம் மலைப் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் அருவிகளில் தண்ணீர் விழத்தொடங்கி உள்ளது. மெயினருவியில் மிதமான அளவில் தண்ணீர் விழுகிறது. இதனால் தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்களும், சுற்றுலா பயணிகளும் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

    செங்கோட்டை பகுதியில் கடந்த இரு நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நேற்று மாலை செங்கோட்டை அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஒன்றரை மணிநேரம் பெய்த மழையால் குளிர்ச்சி நிலவியது.

    அம்பை மற்றும் வி.கே.புரம் பகுதியிலும் நேற்று மழை வெளுத்து வாங்கியது. வி.கே.புரம் அகஸ்தியர் பட்டியில் தெருக்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    நெல்லை- தூத்துக்குடி மாவட்டங்களில் பல இடங்களில் இன்றும் பரவலாக மழை பெய்து வருகிறது. திருச்செந்தூர், காயல்பட்டணம், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதி களில் தண்ணீர் தேங்கியது.

    நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
    பாபநாசம் - 77
    ஆலங்குளம் -63.2
    சேர்வலாறு - 54
    தென்காசி - 47
    சிவகிரி - 47
    குண்டாறு - 34
    செங்கோட்டை - 29
    கருப்பாநதி - 23
    பாளை - 20
    அடவிநயினார் - 18
    நம்பியாறு - 16
    கன்னடியன்கால்வாய் -13.6
    நெல்லை -13
    ஆய்க்குடி -10.2
    ராதாபுரம் - 10
    கடனாநதி - 8
    மூலைக்கரைப்பட்டி -7.3
    அம்பை -5.4
    சேரன்மகாதேவி -2.6
    மணிமுத்தாறு - 2
    களக்காடு -1.2
    நாங்குநேரி -1
    Next Story
    ×