என் மலர்

    செய்திகள்

    திருவாரூர் அருகே மகன் இறந்த அதிர்ச்சியில் தாய் மரணம்
    X

    திருவாரூர் அருகே மகன் இறந்த அதிர்ச்சியில் தாய் மரணம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மகன் இறந்த துக்கத்தில் தாயும் உயிரிழந்த சம்பவத்தால் அலிவலம கிராமம் சோகத்தில் மூழ்கியது.




    திருவாரூர்:


    திருவாரூரை அடுத்துள்ள அலிவலம் வடக்கு அக்ரகாரத்தை சேர்ந்தவர் காத்தையன் (57). ம.தி.மு.க. ஒன்றிய பொருளாளராக இருந்தார்.

    இவர் கடந்த ஒரு வருடமாக தண்டுவட பாதிப்பு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். திடீரென அவர் மாரடைப்பால் இறந்தார்.

    தகவல் அறிந்த வந்த அவரது தாய் ஞானம்பாள் (82) காத்தையன் உடலை பார்த்து மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை தூக்க முயன்றனர். அப்போது அவர் இறந்தது தெரிய வந்தது.

    இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மகன் இறந்த துக்கத்தில் தாயும் உயிரிழந்த சம்பவத்தால் அலிவலம கிராமம் சோகத்தில் மூழ்கியது.

    இருவரது உடல்களும் அலிவலம் கொக்கட்டி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

    Next Story
    ×