search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீரபாண்டியில் தி.மு.க.வினர் ரெயில் மறியல் முயற்சி- வீரபாண்டி ராஜா உள்பட 200 பேர் கைது
    X

    வீரபாண்டியில் தி.மு.க.வினர் ரெயில் மறியல் முயற்சி- வீரபாண்டி ராஜா உள்பட 200 பேர் கைது

    காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இன்று தொடர் ரெயில் மறியல் போராட்டம் தொடங்கியது.இதில் வீரபாண்டி ராஜா உள்பட 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சேலம்:

    சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க.சார்பில் மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ஆ.ராஜா தலைமையில், 200-க்கும் மேற்பட்டோர் முக்கோணம் பகுதியில் இருந்து கோ‌ஷங்களை எழுப்பியபடி ஊர்வலமாக புறப்பட்டு, சேலம் அருகே உள்ள வீரபாண்டி ரெயில் நிலையம் முன்பு வந்தனர்.

    அப்போது, வஞ்சிக்காத வஞ்சிக்காத தமிழகத்தை வஞ்சிக்காதே, மத்திய அரசே, மத்திய அரசே காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைத்திடு உள்ளிட்ட பல்வேறு கோ‌ஷங்களை எழுப்பி வண்ணம் மறியல் செய்ய ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர்.

    இதையடுத்து போலீஸ் துணை கமி‌ஷனர் ராமகிருஷ்ணன், உதவி கமி‌ஷனர் ரவீந்திரன் ஆகியோர் தலைமையிலான 100-க்கும் மேற்பட்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

    இதனால், போலீசாருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே தள்ளு -முள்ளு ஏற்பட்டது. ரெயில் நிலையத்துக்குள் செல்ல தங்களை ஏன்? அனுமதிக்கவில்லை, மறியல் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறினர். ஆனால், இதனை போலீசார் மறுத்தனர். இதனால், போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதையடுத்து தி.மு.க. வினர் சிறிது நேரம் ரெயில் நிலையம் முன்பு நின்று மத்திய அரசையும், ரெயில் நிலையத்துக்குள் செல்ல விடாமல் தடுத்த போலீசாரை கண்டித்தும் கோ‌ஷங்களை எழுப்பினார்கள். இதனால், அங்கு மேலும், பரபரப்பு ஏற்பட்டது.

    இதைதொடர்ந்து, போலீசார் அவர்களை கைது செய்தனர். இந்த போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. தமிழ்செல்வன், முன்னாள் மேயர் ரேகாபிரிய தர்ஷினி, ஒன்றிய செயலாளர்கள் பாரப்பட்டி சுரேஷ்குமார், வெண்ணிலா சேகர், மாணிக்கம், ஆட்டையாம்பட்டி பேரூராட்சி தலைவர் முருகபிரகாஷ், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சிவலிங்கம், இளைஞரணி அமைப்பாளர் சந்திர மோகன், விவசாய அணி துணை அமைப்பாளர் அருள், பூலாவரி ஊராட்சி முன்னாள் துணை தலைவர் ரவி, ஊராட்சி செயலாளர் வெங்கடாசலம், அரியானூர் பச்சியப்பன், பாரப்பட்டி குமார், சோளம்பள்ளம் கார்த்தி, வின்சென்ட் நாகா உள்ளிட்ட தி.மு.க.நிர்வாகிகள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    பின்னர் வேனில் ஏற்றி அழைத்து சென்று நெய்க்காரப்பட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.

    இதைப்போல் கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி செயலாளர் ரமேஷ் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் ரெயில் நிலையம் முன்பு திரண்டனர். அவர்களும் கைது செய்யப்பட்டனர்.

    Next Story
    ×