என் மலர்
செய்திகள்

பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை படத்தில் காணலாம்.
பண்ருட்டி அருகே காண்டிராக்டர் வீட்டில் ரூ.5 லட்சம் நகை-பணம் கொள்ளை
பண்ருட்டி அருகே காண்டிராக்டர் வீட்டில் ரூ.5 லட்சம் மதிப்பிலான நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே உள்ள சேமக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா (வயது 39), காண்டிராக்டர். இவர் தனது குடும்பத்தினருடன் பண்ருட்டி தட்டாஞ்சாவடியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றார்.
இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் அவரது வீட்டின் பின்பக்க அறையின் கூரையை பிரித்து உள்ளே இறங்கினர். அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.70 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச்சென்று விட்டனர். இதன் மொத்த மதிப்பு ரூ. 5 லட்சம் ஆகும்.
நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிய சிவா வீட்டில் பீரோ திறந்து கிடப்பதை பார்த்தார். பீரோவில் இருந்த நகை-பணம் கொள்ளை போய் இருப்பதை கண்டு திடுக்கிட்டார்.
கொள்ளை குறித்து புதுப்பேட்டை போலீசில் சிவா புகார் செய்தார். போலீஸ் துணை சூப்பிரண்டு முரளீதரன், இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரியா தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story