என் மலர்
செய்திகள்

வேப்பூர் அருகே விபத்து: டிராக்டர் மீது ஆம்னி பஸ் மோதி 17 பயணிகள் படுகாயம்
வேப்பூர் அருகே டிராக்டர் மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் 17 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
வேப்பூர்:
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்திலிருந்து சென்னைக்கு தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டது. பஸ்சில் 20 பயணிகள் பயணம் செய்தனர். இந்த பஸ் இன்று அதிகாலை 3 மணிக்கு கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கூத்தக்குடி ரெயில்வே மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது.
அப்போது முன்னால் டிராக்டர் சென்று கொண்டிருந்தது. திடீரென்று அந்த டிராக்டர் மீது ஆம்னி பஸ் மோதியது. இதில் ஆம்னி பஸ்சும், டிராக்டரும் நிலை தடுமாறி தாறுமாறாக ஓடி ரெயில்வே மேம்பால தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தன.
இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. பஸ்சில் இருந்த பயணிகள் இடி பாடுகளுக்குள் சிக்கினர். ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என்று அபயக்குரல் எழுப்பினர்.
விபத்தில் பண்ருட்டி கண்டரக்கோட்டையை சேர்ந்த டிராக்டர் டிரைவர் பழனி, மார்த்தாண்டத்தை சேர்ந்த பஸ் டிரைவர் அமர்நாத், சென்னை போரூரைச் சேர்ந்த லட்சுமி, அசோக்நகரை சேர்ந்த கார்த்திக், நெல்லை கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ராமசுப்பிரமணியன், பாளையங்கோட்டையை சேர்ந்த ராஜா, மதுரை என்.ஜி.நகரை சேர்ந்த மகாலட்சுமி உள்பட 17 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்தனர். விபத்தில் சிக்கி காயமடைந்த 17 பேரையும் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இவர்களில் டிராக்டர் டிரைவர் பழனியின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
விபத்தில் சிக்கி ரெயில்வே மேம்பாலத்திலிருந்து கவிழ்ந்த ஆம்னி பஸ்சும், டிராக்டரும் கிரேன் மூலம் மீட்கப்பட்டன. விபத்து குறித்து வேப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story