என் மலர்tooltip icon

    செய்திகள்

    செங்கல்பட்டு அருகே அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது
    X

    செங்கல்பட்டு அருகே அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது

    செங்கல்பட்டு அருகே அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் வடமாநில பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பெண் பயணிகள் அவருக்கு பிரசவம் பார்த்தனர்.
    செங்கல்பட்டு:

    திருவனந்தபுரத்தில் இருந்து நேற்று இரவு சென்னைக்கு அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு வந்தது.

    இன்று காலை 8.15 மணிக்கு செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் 5-வது பிளாட்பாரத்தில் வந்து நின்றது.

    8.20 மணிக்கு செங்கல்பட்டு ரெயில் நிலையத்திலிருந்து அனந்தபுரி எக்ஸ்பிரஸ் புறப்பட்டு சிறிது தூரம் சென்ற போது பொது பெட்டியில் இருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அவர் வலியால் துடித்தார்.

    உடனே மற்ற பயணிகள் ரெயில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர். இதுபற்றி அவர்கள் ரெயில் நிலைய மேலாளருக்கு தகவல் கொடுத்தனர். அவர் ரெயில்வே ஆஸ்பத்திரிக்கு தகவல் தெரிவித்தார்.

    ஆனால் மருத்துவ குழுவினர் வருவதற்குள் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி அதிகமாக ஏற்பட்டு ரெயிலிலேயே அழகான ஆண் குழந்தை பிறந்தது. பெண் பயணிகள் அவருக்கு பிரசவம் பார்த்தனர்.

    அதன்பின் வந்த மருத்துவ குழுவினர் தாய்-குழந்தைக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து ஆம்புலன்சில் ரெயில்வே ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    பின்னர் தாய்-குழந்தையும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    வடமாநிலத்தைச் சேர்ந்த அப்பெண் பெயர் விவரம் எதுவும் தெரியவில்லை. அவரிடம் ரெயில்வே ஊழியர்கள் இந்தியில் பேசி விவரங்களை கேட்டனர். ஆனால் அவர் எதுவும் கூறவில்லை.

    அவர் ரெயிலில் தனியாக வந்துள்ளார். உடன் யாரும் வராததால் அவர் பற்றிய விவரம் எதுவும் தெரியவில்லை.
    Next Story
    ×