என் மலர்

  செய்திகள்

  ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் அலுவலகம் எரிந்து நாசம் - வாக்காளர் பட்டியல் தீயில் கருகின
  X

  ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் அலுவலகம் எரிந்து நாசம் - வாக்காளர் பட்டியல் தீயில் கருகின

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் அலுவலகத்தில் ஏற்பட்ட தீயினால் வாக்காளர் பட்டியல் தீயில் எரிந்து நாசம் ஆனது.
  ஸ்ரீபெரும்புதூர்:

  ஸ்ரீபெரும்புதூர் தாலுகா அலுவலக வளாகத்தில் தேர்தல் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த தேர்தல் அலுவலகத்தில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குப்பட்டவர்களின் வாக்காளர் பட்டியல் மற்றும் புதிதாக வாக்காளர்களாக சேர விண்ணப்பிக்கப்பட்ட வாக்காளர் படிவங்கள் உள்ளன.

  இந்நிலையில் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் ஊழியர்கள் அலுவலகத்தில் வேலை பார்த்துவிட்டு அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்றனர். இரவு 12 மணியளவில் திடீர் என இந்த அலுவலகம் தீ பிடித்து எரிந்தது.

  தகவல் அறிந்ததும் ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதற்குள் அங்கு இருந்த வாக்காளர் பட்டியல்கள், 6 கம்ப்யூட்டர்கள், 1 டேப்லாப், 3 பிரிண்டர்கள் ஆகியவை எரிந்து நாசம் ஆனது.

  மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததா? அல்லது வேறு காரணமா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

  தேர்தல் அலுவலகம் அருகில்தான் நில அளவை பிரிவு தாலுகா அலுவலகம் உள்ளது. இதில் தீ பரவுவதற்குள் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×