என் மலர்
செய்திகள்

சிவகங்கை அருகே தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற 15 பேர் கைது
சிவகங்கை அருகே தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை:
சிவகங்கை அருகே சக்கந்தி கிராமத்தில் சிலர் இன்று காலை தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்றனர். இதற்காக 15 பேர் காளை மாடுகளுடன் அங்கு வந்தனர்.
இதை அறிந்த சிவகங்கை தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கோமாளி, முருகன் உள்பட 15 பேரை மடக்கி படித்து கைது செய்தனர். 15 காளைகளும், 6 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக சிவகங்கை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்னம்பலம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






