என் மலர்
செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ரூ.18 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல இருந்த ரூ.18 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை இலங்கை செல்லும் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் ஏற வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சென்னையை சேர்ந்த சாகுல் அமீத்வின் பையை சோதனை செய்தபோது அமெரிக்க டாலர், யூரோ பணம் இருந்தது. இதற்கான ஆவணம் அவரிடம் இல்லை.
இதையடுத்து வெளிநாட்டு பணத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 18 லட்சம் ஆகும். விசாரணையில் சாகுல் அமீத் சுற்றுலா விசாவில் இலங்கை வழியாக சிங்கப்பூர் செல்ல இருந்தது தெரிந்தது. அவருக்கு வெளிநாட்டு பணம் கிடைத்தது எப்படி? யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Next Story