என் மலர்
செய்திகள்

தஞ்சை பழைய பஸ் நிலையம் முன்பு விவசாயிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்
உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று தஞ்சையில் விவசாயிகள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு தஞ்சையில் விவசாயிகள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர்.
தஞ்சாவூர்:
காவிரி பிரச்சினையில் 4 வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடிவீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
இந்த தீர்ப்பு விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை கொண்டாடும் வகையில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தஞ்சை பழைய பஸ் நிலையம் முன்பு நேற்று விவசாய சங்கத்தினர் உச்ச நீதி மன்ற தீர்ப்பை வரவேற்று பட்டாசு வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இது போன்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பஸ் நிலையம் அருகில் விவசாயிகள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், வனிகர் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story