என் மலர்

  செய்திகள்

  17 ராணுவ வீரர்கள் பலி: கும்பகோணத்தில் பாகிஸ்தான் கொடி எரிப்பு
  X

  17 ராணுவ வீரர்கள் பலி: கும்பகோணத்தில் பாகிஸ்தான் கொடி எரிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பாகிஸ்தான் கொடி எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
  கும்பகோணம்:

  ஹிஸ்புல்முஜாகிதீன் கமாண்டர் உள்பட 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதை அடுத்து காஷ்மீரில் பிரிவனைவாத அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் அங்கு வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் கடந்த 3 மாதத்தில் 2 போலீசார் உள்பட 84 பேர் பலியாகி உள்ளனர்.

  இதை தொடர்ந்து ஜூலை மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் உள்ளது. இந்த நிலையில் காஷ்மீரில் உரி ராணுவ முகாமில் நேற்று முன்தினம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 இந்திய ராணுவ வீரர்கள் பலியானார்கள். 19 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

  பலியான ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கும்பகோணம் காந்திபூங்கா அருகே நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இந்து மக்கள் கட்சியின் தஞ்சை மாவட்ட செயலாளர் பாலா தலைமை தாக்கினார். இந்து மக்கள் கட்சியின் மாநில நிர்வாகி குருமூர்த்தி, மாவட்ட அமைப்பாளர் ராஜ்குமார், நகர செயலாளர் பாலாஜி, ஒன்றிய அமைப்பாளர் கலியமூர்த்தி, அன்பு, சேகர், முருகன், கார்த்தி, சரவணன் மற்றும் விஸ்வஹிந்து பரி‌ஷத்தின் மாவட்ட தலைவர் துரைதருவேங்கடம், மாவட்ட பொருளாளர் சுப்பராயன், நகர தலைவர் கண்ணன் பா.ஜ.க மாவட்ட பொருளாளர் கோதண்டராமன் உள்ளிட்ட இந்து அமைப்பினர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

  அப்போது இனியும் மத்திய அரசு மவுனம் காக்கக்கூடாது என்றும், பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது தகுந்த பதிலடி கொடுக்கவேண்டும் என்றும் கோ‌ஷமிட்டு, இந்து அமைப்பினர் பாகிஸ்தான் கொடியை தீவைத்து எரித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
  Next Story
  ×