என் மலர்

  செய்திகள்

  ஆத்தூர் அருகே மனைவியை கொலை செய்த கணவர் கைது
  X

  ஆத்தூர் அருகே மனைவியை கொலை செய்த கணவர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆத்தூர் அருகே மனைவியை கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

  ஆத்தூர்:

  சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கீரிப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமன் (வயது 29). இவரது மனைவி கயல்விழி (வயது 23).

  இவர்கள் இருவரும் 4 ஆண்டுகளுக்கு முன்பு தான் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

  நேற்று இரவு வழக்கம் போல் மது குடிப்பதற்காக கயல்விழியிடம் ராமன் பணம் கேட்டு, தகராறில் ஈடுபட்டார். அப்போது பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த அவர் மனைவி என்றும் பாராமல் சேலையால் கயல்விழியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

  இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ராமனை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

  ராமனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. மது குடித்து விட்டு வந்து, மனைவி கயல்விழியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

  மது குடிக்காமல் அவரால் செயல்பட முடியாது என்ற நிலமைக்கு வந்ததும், மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு கொடுத்துள்ளார். அதுபோல் நேற்றும் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

  இதில், ஆத்திரம் அடைந்த அவர் கயல்விழியின் கழுத்தை சேலையால் இறக்கி, கீழே தள்ளினார். இதில் மயங்கி விழுந்த அவரை, அக்கம் பக்கத்தில் வசித்து வரும் தனது உறவினர்களை அழைத்து அவர்கள் உதவியுடன் மீட்டு, ஆத்தூர் கீரிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தார்.

  அப்போது மருத்துவமனையில் மனைவி மண்எண்ணையை எடுத்து குடித்து விட்டதாகவும், இதில் அவர் மயங்கி விழுந்து விட்டதாகவும் ராமன் கூறினார்.

  இதையடுத்து டாக்டர்கள் பரிசோதித்தபோது, கயல்விழி ஏற்கனவே இறந்து விட்டதும், அவர் மண்எண்ணையை குடிக்க வில்லை என்பதும் தெரியவந்தது.

  மனைவியை கொலை செய்து விட்டு, மண்எண்ணையை குடித்து விட்டதாக கணவர் நாடக மாடியது அம்பலமானது.

  இது குறித்து டாக்டர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் ராமன் கைது செய்யப்பட்டார்.

  Next Story
  ×