என் மலர்
செய்திகள்

மழை பெய்ய வேண்டி பெண்கள் வட்டமிட்டு ஒப்பாரி பாட்டு பாடினர்
ஈரோடு அருகே மழை பெய்யவேண்டி பெண்கள் வினோத வழிபாடு
ஈரோடு அருகே மழை பெய்யவேண்டி வீடுவீடாக பழையசோறு வாங்கி ஒப்பாரிவைத்து பெண்கள் வினோத வழிபாடு நடத்தினர்.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி சுற்று வட்டார பகுதியில் கடந்த சில மாதங்களாக சில இடங்களில் மட்டுமே லேசான மழை பெய்கிறது. மற்ற இடங்களில் சுத்தமாக மழை பெய்யவில்லை.
எல்.பி.பி வாய்க்கால் தண்ணீரும் திறந்து விடவில்லை. இதனால் வறட்சி அதிகரித்து விவசாய பயிர்கள் காய்ந்து வருகிறது. இந்த நிலையில் மழைக்கஞ்சி எடுத்தால் மழை பெய்யும் என்ற ஐதீகத்தின்படி அவல் பூந்துறை செங்காட்டு வலசு பகுதியில் உள்ள பெண்கள் ஒன்று கூடி மழை பெய்ய வேண்டியும், கிராமம் செழிக்க வேண்டியும், தொடர்ந்து மூன்று நாட்கள் தினமும் காலை முதல் மாலை வரை விரதமிருந்து, மாலை 6 மணிக்கு மேல் வீடு வீடாக சென்று மண்சட்டியில் மழைக்கஞ்சி (பழைய சோறு) வாங்கி வந்து ஊர் மாகாளியம்மன் கோவில் முன்பு வைக்கப்பட்டிருந்த பெரிய மண் சட்டியில் ஊற்றினர்.
இதையடுத்து பெண்கள் ஒப்பாரி பாட்டு பாடி மழை பெய்ய வேண்டி வேண்டினர். பின்னர் சிறப்பு பூஜைகள் செய்து, மழைக்கஞ்சியை அனைவருக்கும் பிரசாதமாக வழங்கி விட்டு மழை பெய்யாத ஊரில் நாங்கள் குடியிருக்க மாட்டோம் என்று கோவித்து கொண்டு ஊரை விட்டு சென்றனர்.
இதையடுத்து ஆண்கள் ஊர் எல்லை வரை சென்ற பெண்களை நமது ஊருக்கு கண்டிப்பாக மழை பெய்யும், கிராமம் செழிக்கும், கடவுள் நம்மை காப்பாற்றுவார் வாருங்கள் என்று சமாதானம் செய்து அழைத்து வந்தனர். இதே போல் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்றது.
இது குறித்து ஊர் பொது மக்கள் கூறியதாவது:-
சுமார் 15 ஆண்களுக்கு முன்பு மழை இல்லாத போது இதேபோல் பெண்கள் அனைவரும் ஒன்று கூடி மழைக்கஞ்சி எடுத்து, ஒப்பாரி வைத்து ஊரை விட்டு சென்றனர். ஊர் எல்லைக்கு சென்ற போது ஆண்கள் சமரசம் செய்து அழைத்து வந்தார்கள்.
பின்னர் மூன்று நாட்களுக்குள் மழை பெய்தது. இதனால் இந்த வருடமும் பெண்கள் அனைவரும் மழைச்சோறு எடுக்கலாம் என்று முடிவு செய்து விரதமிருந்து மழைச்சோறு எடுத்து விழிபாடு நடத்தியுள்ளோம். மழைபெய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. மழை பெய்தவுடன் இங்குள்ள மாகாளியம்மனுக்கு 1008 குடம் தீர்த்தம் எடுத்து வந்து சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் செய்ய முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story