search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா கட்சி தனித்து போட்டியிடும்: தேசிய செயலாளர் எச்.ராஜா பேட்டி
    X

    உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா கட்சி தனித்து போட்டியிடும்: தேசிய செயலாளர் எச்.ராஜா பேட்டி

    உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா கட்சி தனித்து போட்டியிடும் என்று கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறினார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரத்தில் பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    காஷ்மீர் பிரச்சினை குறித்து டெல்லியில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் இந்தியாவின் இறையாண்மையை விட்டுக் கொடுக்க முடியாது என்பதை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளதை வரவேற்கிறேன்.

    பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு காஷ்மீர் பிரச்சினையில் சரியான நடைமுறையை கடைபிடித்து வருகிறது. கர்நாடகாவில் இருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை வரவேற்கிறேன்.

    அங்கு நடைபெறும் போராட்டம் பற்றி கவலைப்பட தேவையில்லை. கர்நாடகத்தில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்து நல்லிணக்கத்தை ஏற்படுத்த மாநில முதல்வர் சித்தராமையா முயற்சி மேற்கொள்ள வேண்டும். கேரளாவில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகம் மீது குண்டு வீசப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மட்டுமல்லாமல் கேரளாவில் கம்யூனிஸ்டு கட்சி ஆட்சி பொறுப்பில் வந்ததில் இருந்து ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதாவினர் படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து போலீசாரிடம் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதில்லை. கேரள முதல்வரின் ஒருதலைப்பட்ச நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

    வருகிற 23, 24, 25-ந் தேதிகளில் கேரள மாநிலம் கோழிகோட்டில் பா.ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு, பொதுக்குழு கூட உள்ளது. இதில் பிரதமர் மோடி, கட்சி தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள், 9 மாநில முதல்வர்கள், 2 துணை முதல்வர்கள், 350 எம்.பி.க்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    இந்த நிலையில் பா.ஜனதா அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதை கண்டிக்கிறோம்.

    ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் பள்ளி வாசல் வழியாக செல்ல முஸ்லிம் ஜமாத்தினர் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காத நிலையில் அந்த வழியில் ஊர்வலம் செல்ல போலீசார் தடுத்ததை கண்டிக்கிறோம்.

    தமிழக உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா கட்சி தனித்து போட்டியிடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×