என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூர் தலைமை தபால் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர்.
    X
    திருவள்ளூர் தலைமை தபால் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர்.

    வேலை நிறுத்த போராட்டம்: திருவள்ளூர் அரசு அலுவலகத்தில் ஊழியர்கள் பணிக்கு வரவில்லை

    வேலை நிறுத்தத்தால் திருவள்ளூர் அரசு அலுவலகத்தில் ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

    காஞ்சீபுரம்:

    அகில இந்திய தொழிற்சங்கங்கள் 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து உள்ளது.

    தமிழகத்தில் பல்வேறு தொழிற்சங்கங்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளன.

    திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடின. கூடுதலாக 13 அரசு பஸ்கள் இயக்கப்பட்டது.

    திருவள்ளூர் தலைமை தபால் நிலையம், ரெயில் நிலையம், பஸ் பணிமனையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகள் மட்டும் பணியில் இருந்தனர் .பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வரவில்லை.

    இதைப்போல் திருவள்ளூர் தாசில்தார் அலுவலகத்தில் ஊழியர்கள் யாரும் பணிக்கு வரவில்லை. இதனால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் பணிகள் பாதிக்கப்பட்டது.

    திருவள்ளூர் தலைமை தபால் நிலையம் முன்பு சி.ஐ.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். திடீரென அவர்கள் மறியல் செய்தனர்.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 500 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்,.

    காஞ்சீபுரத்தில் பொது வேலை நிறுத்தத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம் போல் ஓடியது. பொது மக்கள் அதிகமாக பயணிக்கும் ஷேர் ஆட்டோக்கள் மற்றும் ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்கின

    நகரின் முக்கிய சாலைகளான காந்தி சாலை, காமராஜர் சாலை, ரெயில்வே சாலை உள்ளிட்ட இடங்களில் கடைகள் வழக்கம் போல் திறந்திருந்தன. முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    காஞ்சீபுரம் தேரடியில் இருந்து தொழிற்சங்கத்தினர் 300-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள காவலான்கேட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    மதுராந்தகத்தில் வழக்கம் போல் பஸ்கள் ஓடின. ஆட்டோக்கள் மட்டும் ஓட வில்லை.

    இதேபோல் செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் எந்த வித பாதிப்பும் இன்றி பஸ்கள் இயங்கியது. பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பஸ்நிலையம், ரெயில் நிலையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×