என் மலர்

    செய்திகள்

    மழைக்கு ஒதுங்கியபோது லாரி சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலி - 10 பேர் உயிர் தப்பினர்
    X

    மழைக்கு ஒதுங்கியபோது லாரி சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலி - 10 பேர் உயிர் தப்பினர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மழைக்கு ஒதுங்கியபோது லாரி சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலியானார். அதிர்ஷ்டவசமாக அவனுடன் நின்ற மேலும் 10 பேர் உயிர் தப்பினர்.
    ஊத்துக்கோட்டை:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள மீட்புதுறை கிராமம் இருளர் காலனியை சேர்ந்தவர் ராஜா. மரம் வெட்டும் தொழிலாளி. இவரது மகன் திருப்பதி (வயது 15) எட்டாவது வரை படித்துள்ளான்.

    ராஜா தலைமையில் சுமார் 25 தொழிலாளிகள் ஊத்துக்கோட்டை அருகே உள்ள சென்றாம்பாளையம் பகுதியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான கருவேல மரங்களை வெட்ட கடந்த வாரம் வந்தனர்.

    ராஜா தனது குடும்பத்தினரையும் அழைத்து வந்து இருந்தார். நேற்று மாலை சென்றாம்பாளையம் பகுதியில் திடீர் என்று பலத்த மழை பெய்தது. அப்போது மரங்கள் வெட்டி கொண்டிருந்த தொழிலாளர்கள் சிலர் கூடாரத்துக்குள் சென்று விட்டனர்.

    சிறுவன் திருப்பதி மற்றும் 10 பேர் மரங்களை ஏற்றி வந்த லாரிக்கு அடியில் ஒதுங்கி நின்றனர். இதை கவனிக்காத டிரைவர், லாரியை இயக்கினார். லாரிக்கு அடியில் இருந்த தொழிலாளர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.

    திருப்பதி மட்டும் லாரியின் முன் சக்கரத்தில் சிக்கி கொண்டார். இதில் சம்பவ இடத்திலேயே அவன் உடல் நசுங்கி பலியானார். அதிர்ஷ்டவசமாக அவனுடன் நின்ற மேலும் 10 பேர் உயிர் தப்பினர்.

    இதுகுறித்து பென்னாலூர்பேட்டை இன்ஸ்பெக்டர் பரந்தாமன் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் ஜெயவேலுவை தேடி வருகிறார்.

    காஞ்சீபுரத்தை அடுத்த செட்டியார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (40). கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் வீட்டில் இருந்து கடைக்கு நடந்து சென்றார்.

    சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை அவர் கடக்கும் போது சாலையில் வேகமாக வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதி நிற்காமல் சென்றுவிட்டது. தூக்கி வீசப்பட்ட சிவக்குமார் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    Next Story
    ×