என் மலர்

    செய்திகள்

    சிறுவாணி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட தீவிரம்: கேரள அரசு அதிகாரிகள் ஆய்வு பணி தொடக்கம்
    X

    சிறுவாணி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட தீவிரம்: கேரள அரசு அதிகாரிகள் ஆய்வு பணி தொடக்கம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தமிழக கேரளா எல்லையான ஆனைக்கட்டியை அடுத்து அகழி உள்ளது. இந்த பகுதியில் சிற்றூர் கிராம பகுதியில் பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு புதிய அணை கட்ட தீவிர முயற்சி செய்து வருகிறது.
    கவுண்டம்பாளையம்:

    தமிழக கேரளா எல்லையான ஆனைக்கட்டியை அடுத்து அகழி உள்ளது. இந்த பகுதியில் சிற்றூர் கிராம பகுதியில் பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு புதிய அணை கட்ட தீவிர முயற்சி செய்து வருகிறது.

    கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பவானி ஆறு உள்ளது.

    இதன் மூலம் தான் பில்லூர் ஒன்று மற்றும் 2வது குடிநீர் கோவையின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. அதேபோல சிறுவாணி அணையில் இருந்து வரும் நீரும் கோவையின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது.

    கடந்த 1978-ம் ஆண்டில் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது கேரளாவில் கருணாகரன் ஆட்சியில் இருந்தார். அப்போது சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்ட தீவிர முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் பல போரட்டங்களால் இந்த அணை கட்டும் முயற்சி நிறுத்தப்பட்டது. அப்போது அணை கட்டுவதற்காக கொண்டு வந்த இயந்திரங்கள் மற்றும் வாகனங்கள் துருப்பிடித்து கிடக்கின்றன. பல வருடங்களுக்கு பிறகு 2012 ஆண்டு இந்த பகுதியில் உள்ள மக்களுக்காக இங்கு அணை கட்ட வேண்டும் என்று நடவடிக்கை எடுக்க கேரளா அரசு முயற்சி செய்தது. ஆனால் அப்போதும் தமிழக விவசாயிகள் மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியினர் போராட்டம் செய்யவே மீண்டும் கைவிடப்பட்டது.

    தற்போது, சிறுவானி ஆறு பவானி ஆற்றில் கலக்கும் இடத்தில் அருகே அணை கட்ட கேரள அரசு முடிவு செய்து அதற்கான திவீர முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

    சுமார் ரூ.900 கோடியில் 51 அடி உயரத்தில் 500 மீட்டர் அகலத்தில் 4650 ஹெக்டேர் பரப்பளவில் இந்த அணை கட்டுவதற்கு ஆய்வு நடப்பதாக கூறப்படுகிறது.

    மத்திய அரசு நீர்பாசன மதிப்பீட்டுக்குழு அனுமதியும் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் புதிய அணை கட்டுமான பணிகளை கேரள நீர்பாசன துறையை சேர்ந்த டிசைன் அண்டு ரிசர்ச் போர்டு (ஐடிஆர்பி) அணை கட்டும் பகுதியில் சுற்றுச்சூழல் சாதக-பதாகங்கள் குறித்து செய்ய தனியார் நிறுவனத்திடம் பணிகளை ஒப்படைத்துள்ளனர்.

    இதனால் கேரள அரசு அதிகாரிகள் இங்கு வந்து ஆய்வு பணியை தொடங்கி உள்ளனர் என்று கூறப்படுகிறது.

    மேலும் கடந்த 1978-ம் ஆண்டில் புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சித்த போது கிடப்பில் வைக்கப்பட்டு இருந்த கான்கிரீட் கலவை எந்திரங்களை மீண்டும் பயன்படுத்துவது குறித்தும் கேரள அரசு அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே சிறுவாணி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டினால் கொங்கு மண்டலத்தின் விவசாயம், மற்றும் பொது மக்களின் குடிநீர் ஆதாரம் அடியோடு பாதிக்கும் சூழ்நிலை உள்ளது.

    இதனால் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு விவசாய சங்கத்தினர், அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தற்போது விவசாயிகள், அரசியல் கட்சியினரின் போராட்டம் வலுப்பெற்று வருகிறது.

    இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயி தமிழ்செல்வன் கூறும்போது,

    அட்டபாடி பகுதியில் 3 பஞ்சாயத்துகள் உள்ளன. அதில் சோலையூர் பஞ்சாயத்தில் 65 சதவீதமும், புதூர் பஞ்சாயத்தில் 95 சதவீதம் தமிழர்கள் வாழ்கின்றனர். அதேபோல அகழி பஞ்சாயத்தில் 50 சதவீதம் பேர் தமிழர்கள் தான் உள்ளனர். இந்த அணை கட்டும் பகுதியான சிற்றூர் வெங்ககடவு பகுதியானது மூன்று பகுதியிலும் தமிழர்களே விவசாயம் செய்து வருகின்றனர்.

    மேலும் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி கேரளா 6 டி.எம்.சி தண்ணீர் எடுக்கலாம். ஆனால் அவர்கள் இதுவரை எடுக்கவில்லை. இதனால் காவிரி ஆற்றின் கிளை ஆறான பவானி ஆற்றில் நீர் எடுக்க கேரளா அரசுக்கு வாய்ப்பு இருக்கிறது.

    இதனால் இந்த பகுதியில் புதிய அணை கட்ட கேரளா அரசு முயல்கிறது. இங்கு மழை பெய்து பல நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் கொங்கு மண்டல மக்கள் மற்றும் அட்டப்பாடி மக்களின் வாழ்வாதராமாக விளங்கும் இந்த ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது எங்களின் வாழ்க்கைக்கு கேள்வி குறியாக உள்ளது. இதற்கு இரண்டு மாநில முதல்வர்களும் பேசி ஓர் சுமுக தீர்வு ஏற்படுத்தினால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும்.

    ஆதிவாசி பேட்டி...

    இது குறித்து வெங்ககடவு கிராம ஆதிவாசி ரங்கன் கூறியதாவது:-

    இந்த பகுதியில் புதிய அணை கட்டும்போது எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அதாவது இங்குள்ள மக்களின் தொழில்களான ஆடு, மாடு மேய்த்தல், விவசாயம் செய்தல் உள்ளிட்டவைகள் செய்யமுடியாது. எங்களால் இங்கிருந்து வேறு பகுதிக்கு செல்ல முடியாது.

    இதன் மூலம் வெங்ககடவு, சுண்ட குளம், கோட்டமலை, கோலிக்கூடம் மற்றும் மாரரெட்டி உள்ளிட்ட ஆதிவாசி கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். ஏற்கனவே 1978ம் ஆண்டு இப்படிதான் புதிய அணை கட்டுவதாக கூறி எங்களை இங்கிருந்து மலை பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×