என் மலர்

    செய்திகள்

    தூத்துக்குடியில் ஒருதலை காதலால் கொல்லப்பட்ட ஆசிரியையின் உடல் குடும்பத்தினரிடம் இன்று ஒப்படைப்பு
    X

    தூத்துக்குடியில் ஒருதலை காதலால் கொல்லப்பட்ட ஆசிரியையின் உடல் குடும்பத்தினரிடம் இன்று ஒப்படைப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தூத்துக்குடியில் ஒருதலை காதலால் கொல்லப்பட்ட ஆசிரியையின் உடல் இன்று அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி இந்திரா நகரை சேர்ந்த தம்பதி நியூமேன்-புரோசிட்டா. இவர்களது மகள் பிரான்சினா (வயது 24). பிளஸ்-2 வரை படித்து விட்டு ஆசிரியர் பயிற்சி முடித்துள்ள இவர் தூத்துக்குடி சண்முகபுரத்தில் உள்ள ஒரு தனியார் தொடக்க பள்ளியில் கடந்த 3 வருடமாக ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

    இவர் தினமும் வேலைக்கு வீட்டிலிருந்து பள்ளிக்கு நடந்து சென்று வந்துள்ளார். பள்ளிக்கு செல்லும் இவர் அங்குள்ள வளாகத்தில் உள்ள தூய பேதுரு ஆலயத்தில் பிரார்த்தனை செய்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். நேற்று காலை பள்ளிக்கு வந்த பிரான்சினா வழக்கம் போல பள்ளி வளாகத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த தூத்துக்குடி மறக்குடி தெருவை சேர்ந்த ஜோதி கோமஸ் மகன் கீகன் ஜோஸ் (25) ஆலயத்திற்குள் புகுந்து பிரார்த்தனை செய்து கொண்டிருந்த பிரான்சினாவை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடி விட்டார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை பள்ளியில் தங்களது குழந்தைகளை விட வந்த பெற்றோர் பிரான்சினாவை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பள்ளி ஆசிரியை வெட்டப்பட்ட கிறிஸ்தவ ஆலயம் முன்பு ஆசிரியர்கள், குழந்தைகள், மாணவர்கள் ஏராளமானோர் திரண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட ஆசிரியை பிரான்சினா சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஸ் தலைமையில் தென்பாகம் போலீசார் கொலை நடந்த இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் கொலையாளி கீகன்ஜோசை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து அவரை தேடி வந்தனர். பள்ளி ஆசிரியை வாலிபரால் வெட்டி கொலை செய்யப்பட்ட தகவல் தூத்துக்குடி முழுவதும் பரவியது. இதையடுத்து பிரான்சினா வேலை பார்த்த பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.

    இந்நிலையில் தூத்துக்குடி மணலி தெருவில் உள்ள தனது சகோதரி வீட்டில் கீகன் ஜோஸ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியை பிரான்சினாவை கீகன் ஜோஸ் ஏன் வெட்டிக்கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தினர். அதில் பரபரப்பு தகவல் வெளியானது.

    தூத்துக்குடி துறைமுகத்தில் தனியார் நிறுவன கிரேன் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்த கீகன் ஜோஸ், ஆசிரியை பிரான்சினாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அவர் வேலைக்கு நடந்து செல்லும் போது தினமும் கீகன் ஜோஸ் அவரை பின் தொடர்ந்து தன்னை காதலிக்குமாறு தொந்தரவு கொடுத்துள்ளார். ஆனால் அவரது காதலை பிரான்சினா ஏற்கவில்லை.

    இதற்கிடையே பிரான்சினாவின் பெற்றோர் மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து நிச்சயதார்த்தம் செய்தனர். இதையடுத்து பிரான்சினாவுக்கு வருகிற 8-ந்தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமணத்திற்கு பிறகு வேலைக்கு செல்ல விரும்பாத பிரான்சினா தனது வேலையை விட முடிவு செய்து பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்திருந்தார்.

    நேற்று கடைசி நாளாக வேலைபார்த்து விட்டு சம்பளத்தை வாங்கி வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு பள்ளிக்கு பிரான்சினா புறப்பட்டு சென்றுள்ளார்.

    வழக்கம் போல பள்ளி வளாகத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் பிரான்சினா பிரார்த்தனை செய்து கொண்டிருந்த போது அங்கு வந்த கீகன்ஜோஸ் அவரை வெட்டி கொலை செய்ததும், பின்னர் போலீஸ் விசாரணைக்கு பயந்து அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    கொலை செய்யப்பட்ட ஆசிரியை பிரான்சினாவின் உடல் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அங்கு பிரான்சினாவுடன் வேலை பார்த்த ஆசிரிய-ஆசிரியைகள், உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் ஏராளமானோர் திரண்டிருந்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்பு பிரான்சினாவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரான்சினாவின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
    Next Story
    ×