என் மலர்
செய்திகள்

வணிகவரி அடையாள எண் வழங்க வியாபாரியிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது
வணிகவரி அடையாள எண் வழங்க வியாபாரியிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரியை ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து, விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகேயுள்ள மணலூர் பேட்டையைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் நெல், சோளம் போன்ற வேளாண்பொருட்களை விற்பனை செய்யும் தொழில் தொடங்க முடிவு செய்தார்.
இதற்காக வணிகவரி அடையாள எண் பெறுவதற்காக திருக்கோவிலூரில் உள்ள வணிகவரி அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
இதுதொடர்பான பணிகளை முடிக்க வணிக வரி அதிகாரியான கடலூர் புதுப்பாளையத்தைச் சேர்ந்த தவமணி(வயது 52) ரூ.8 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
லஞ்சம் கொடுக்க மனமில்லாத பாண்டியன் விழுப்புரத்தில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார்.
போலீசார் கூறிய அறிவுரைப்படி திருக்கோவிலூரில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்துக்கு பாண்டியன் சென்றார். பின்னர் ரசாயனம் தடவிய ரூ.8 ஆயிரத்தை தவமணியிடம் கொடுத்தார்.
அப்போது அங்கு ஏற்கனவே மறைந்திருந்த ஊழல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி.விஸ்வேஷ் வரய்யா, இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் தவமணியை கையும் களவுமாகப்பிடித்து கைது செய்தனர். பின்னர் விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story