என் மலர்
செய்திகள்

குவைத்தில் இறந்த கணவர் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் பெண் மனு
குவைத்தில் இறந்த கணவர் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி காஞ்சீபுரம் கலெக்டரிடம் பெண் மனு அளித்துள்ளார்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் கல்பாக்கம் அடுத்த வாயலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கவிசியாமளா. இவர் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டரிடம் கண்ணீர் மல்க மனு ஒன்றை அளித்தார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது:-
எனது கணவர் முத்துவேல் ராஜா (27). குவைத் நாட்டிற்கு இரண்டு ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் டிரைவர் வேலைக்கு முருகானந்தம் என்பவர் அவரை அழைத்து சென்றார்.
மாதம் 30 ஆயிரம் சம்பளம் என கூறிய அவரிடம் இந்த வேலைக்காக 1 லட்ச ரூபாய் கொடுத்தோம். கடந்த மாதம் வெளிநாடு சென்ற எனது கணவர் கடந்த 1-ந் தேதி முதல் என்னுடன் பேசவில்லை.
மேலும் அதற்குமுன் பேசுகையில் தன்னுடன் தங்கியிருந்த முருகானந்தம் சண்டையிட்டதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் எனது கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த திங்கட்கிழமை (22-ந் தேதி) மாலை 4 மணிக்கு இறந்ததாக எனக்கு தகவல் கிடைத்தது.
எனது கணவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் வருகிறது. நான் 3 குழந்தைகளுடன் மிகவும் கஷ்டத்தில் உள்ளேன். எனது கணவர் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவி செய்ய வேண்டும். ஏழ்மையான நிலையில் உள்ள எங்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.

Next Story