என் மலர்
செய்திகள்

வேதாரண்யத்தில் ரூ. 20 ஆயிரம் கடன் ஆசை காட்டி புடவை விற்று நூதன மோசடி: கணவன்-மனைவி கைது
வேதாரண்யத்தில் மோசடியில் ஈடுபட்ட கணவன்-மனைவி கைது செய்யப்பட்டனர்.
வேதாரண்யம்:
திருச்சி பெரிய மிளகுபாறையை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (46). இவரது மனைவி அனுசுயா என்கிற பரிதா (42). இருவரும் வீடு, வீடாக சென்று புடவை வியாபாரம் செய்து வருகின்றனர்.
வியாபார தந்திரமாக ஒரு புடவை, ஒரு ஜோடி கவரிங் வளையல், ஒரு செயின் ஆகியவற்றை ரூ. 550-க்கு வாங்கினால் 15 நாட்களில் 12 சதவீத வட்டிக்கு ரூ. 20 ஆயிரம் கடன் தருவதாக ஆசை வார்த்தை கூறி மோசடியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் இருவரும் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் முகாமிட்டு புடவை வியாபாரம் செய்தனர்.
வேதாரண்யம் அகஸ்தியன் பள்ளி கிராமத்துக்கு சென்று பலரிடம் புடவை வியாபாரம் செய்தனர். அப்பகுதியை சேர்ந்த குழந்தைவேல் அவரது மனைவி மாரிமுத்து ஆகியோரிடம் புடவை விற்றுவிட்டு வழக்கம் போல் 15 நாட்களில் கடனாக ரூ. 20 ஆயிரம் கொடுக்கவில்லை.
இதுகுறித்து மாரிமுத்து வேதாரண்யம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரங்கராஜன் வழக்கு பதிவு செய்து நூதன மோசடியில் ஈடுபட்ட சுப்பிரமணியன், அவரது மனைவி அனுசுயாவை கைது செய்தார்.
அவர்கள் கோர்டடில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.

Next Story