என் மலர்tooltip icon

    செய்திகள்

    அச்சரப்பாக்கத்தில் படித்து வந்த இலங்கை தமிழ் மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கம்: மீண்டும் சேர்க்க கலெக்டர் நடவடிக்கை
    X

    அச்சரப்பாக்கத்தில் படித்து வந்த இலங்கை தமிழ் மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கம்: மீண்டும் சேர்க்க கலெக்டர் நடவடிக்கை

    அச்சரப்பாக்கத்தில் தங்கி படிக்கும் இலங்கை தமிழ் மாணவர்களை பள்ளி நிர்வாகம் இடைநீக்கம் செய்தது. கலெக்டரின் உத்தரவின் பேரில் அவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    அச்சரப்பாக்கம்:

    இலங்கையில் சண்டை நடந்தபோது அங்கிருந்து புலம் பெயர்ந்த தமிழர்களின் குழந்தைகள் கல்விக்காக பெங்களூரூவில் இலங்கையை சேர்ந்த ஞானசேகர், தொண்டு நிறுவனம் தொடங்கி ஒரு கட்டிடத்தை 25 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்து ஆங்கில வழி கல்வி பயிற்றுவித்து வந்தார். குத்தகைகாலம் முடிந்த பிறகு பெங்களூருவில் உள்ள இந்த இடத்தின் உரிமையாளர் குத்தகையை நீட்டித்து தர மறுத்துவிட்டார்.

    இதனால் இலங்கை தமிழர் வாழும் முகாம்களுக்கு பல மாணவர்கள் சென்றது போக மீதமுள்ள மாணவ-மாணவிகள் பலரை காஞ்சீபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் உள்ள ஒரு கட்டிடத்தை வாடகை எடுத்து தொண்டு நிறுவனம் தங்கவைத்தது. இதில் அச்சரப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 17 மாணவர்களும், அரசு மகளிர் பள்ளியில் 11 மாணவிகளும் சேர்க்கப்பட்டனர். கல்லூரியில் 2 மாணவிகள் பட்டப்படிப்பு பயின்று வருகின்றனர். செண்டிவாக்கம் கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 20 பேர் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் செண்டிவாக்கத்தில் படிக்கும் 20 மாணவ-மாணவிகளின் கல்வி கட்டணம் தொண்டு நிறுவனத்திடம் இருந்து கிடைக்குமா? என்ற சந்தேகத்தின் பேரில் அவர்களை பள்ளி நிர்வாகம் இடைநீக்கம் செய்தது.

    இது பற்றி அறிந்த கலெக்டர் கஜலட்சுமி, செண்டிவாக்கம் பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள மாணவ- மாணவிகளின் கல்வி தடைபடாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அதன் பேரில் செண்டிவாக்கம் பள்ளி நிர்வாகம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள மாணவ- மாணவிகளை நாளை (திங்கட்கிழமை) முதல் பள்ளிக்கு வர அனுமதி அளித்தது.

    இதனிடையே மத்திய புலனாய்வு துறை, மாநில உளவு பிரிவு மற்றும் அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் ஆகியோர் மாணவ-மாணவிகள் அனுமதி பெற்று இங்கு தங்கியுள்ளனரா? என விசாரணை மேற்கொண்டனர். நேற்று மாலை மதுராந்தகம் உதவி கலெக்டர் அன்புச்செல்வன், மதுராந்தகம் வட்டாட்சியர் கற்பகம், மண்டல தாசில்தார் நாகராஜன் ஆகியோர் தொண்டு நிறுவனத்தில் ஆய்வு செய்தனர்.
    Next Story
    ×