என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற 20 கிலோ மயில் தோகைகள் பறிமுதல்: ஒருவர் கைது
    X

    சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற 20 கிலோ மயில் தோகைகள் பறிமுதல்: ஒருவர் கைது

    சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற 20 கிலோ மயில் தோகைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு விமானம் சென்றது. அதில் செல்ல வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது சிவகங்கையைச் சேர்ந்த ராயப்பன் ஜோசப்(வயது 45) என்பவரின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் 20 கிலோ மயில் தோகைகளை மறைத்து வைத்து சிங்கப்பூருக்கு கடத்திச் செல்ல முயன்றதை கண்டுபிடித்தனர்.

    அவற்றை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், ராயப்பன் ஜோசப்பின் விமான பயணத்தை ரத்து செய்தனர். அவரை கைது செய்த அதிகாரிகள், அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

    அதேபோல் சென்னையில் இருந்து சவுதிஅரேபியாவுக்கு விமானம் சென்றது. அதில் ஏற வந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த முகமது அனிபா(38) என்பவரின் சூட்கேசை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது சூட்கேசின் உள்ளே அவர், ரூ.36 லட்சம் மதிப்புள்ள 18 கிலோ சந்தன கட்டைகளை மறைத்து வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், முகமது அனிபாவை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×