என் மலர்
செய்திகள்

திருத்தணி அருகே மர்ம காய்ச்சலுக்கு மேலும் 2 சிறுவர்கள் பலி
திருத்தணி அருகே மர்ம காய்ச்சலுக்கு மேலும் 2 சிறுவர்கள் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பள்ளிப்பட்டு:
திருத்தணியை அடுத்த காவேரிராஜபுரம் பகுதியில் திடீரென்று மர்ம காய்ச்சல் பரவியது. அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.
தகவல் அறிந்ததும் சுகாதாரக் குழுவினர் அங்கு விரைந்து சென்று காய்ச்சலால் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் காய்ச்சல் தீவிரமாக இருப்பவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காவேரிராஜபுரம் அருநத்தி காலனியை சேர்ந்த சந்தோஷ் (வயது 6), ஆதி திராவிட காலனியை சேர்ந்த யுவராஜ் (13) ஆகியோர் இறந்தனர்.
இந்த நிலையில் இன்று காலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அருந்ததி காலனியை சேர்ந்த மோகன் (9), மோகன்குமார் (6) ஆகிய 2 சிறுவர்களும் பரிதாபமாக இறந்தனர்.
இதனால் காவேரி ராஜபுரம் கிராமத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. அங்கு சுகாதாரத் துறையினர் தொடர்ந்து முற்றுகையிட்டு மர்ம காய்சசலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். தாசில்தார் அபிஷேகமும் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டார்.

Next Story