என் மலர்
செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்: ஈரோட்டில் தலைமை தேர்தல் அதிகாரி ஆய்வு
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு என்னென்ன ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளன? தேர்தலுக்கு தயாராக மாவட்ட நிர்வாகம் உள்ளதா? என கேட்டறிந்தார்.
ஈரோடு:
தமிழக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி இன்றும் அறிவிக்காவிட்டாலும் அனைத்து அரசியல் கட்சியினரும் உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்தப் பணியில் தீவிரமாக ஈடுபட தொடங்கி உள்ளனர்.
இதேபோல் உள்ளாட்சி தேர்தலுக்கான விரிவான ஏற்பாடுகளையும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
உள்ளாட்சி தேர்தல் பணி தொடர்பாக தமிழக தேர்தல் அதிகாரி சீதாராமன் ஒவ்வொரு மாவட்டங்களிலும் தேர்தல் பற்றிய ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் தலைமை தேர்தல் அதிகாரி சீதாராமன் நேற்று ஈரோடு வந்தார். அவர் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். உள்ளாட்சி தேர்தலுக்கு என்னென்ன ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளன? தேர்தலுக்கு தயாராக மாவட்ட நிர்வாகம் உள்ளதா? என கேட்டறிந்தார்.
மேலும் ஈரோடு மாவட்டத்தில் எத்தனை பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சிகள் உள்ளன? எந்தெந்த பகுதிகள் பதட்டமானவை? பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்தும் தலைமை தேர்தல் அதிகாரி அரசு அலுவலர்களுடன் கேட்டறிந்தார்.

Next Story